வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25 உயர்வு- சென்னையில் ரூ. 850 ஆக விற்பனை
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25 ரூபாய் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் 100 ரூபாய் உயர்ந்த நிலையில் மார்ச் மேலும் 25 ரூபாய் அதிகரித்தது. 3 மாதத்திற்குப் பிறகு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிக
சென்னை: சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.850 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதித்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும்16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 610 ரூபாயாக இருந்த இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜனவரி மாதத்தில் 710 ரூபாயாக விற்பனையானது.
கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. 16ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் 25 ரூபாய் உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்தது.
மார்ச் 1ஆம் தேதியன்று மீண்டும் 25 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 835 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையானது. இதனால் எதிர்கட்சியினர் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தின. இதனையடுத்து மார்ச் 31ஆம் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 10 ரூபாய் குறைத்து அறிவித்தன.
இதனையடுத்து சிலிண்டர் விலை 825 ரூபாய் ஆக விற்பனையானது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் இன்று 25 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை 850 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications