Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் தலைமை பண்பு எப்படி இருக்கிறது? இதுக்கு மா.சுப்பிரமணியன் கூறிய நச் பதில் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர், திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாரத்தான் வீரர் என்று பன்முகம் கொண்ட மா.சுப்பிரமணியனை இந்த தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் சந்தித்தோம். அரசியலைத் தாண்டி அசத்தும் மா.சுப்பிரமணியனிடம் 'ஒன் இந்தியா தமிழ்' சார்பில் சில கேள்விகளை வைப்போம் வாருங்கள்.

மாரத்தானில் சாதனை

மாரத்தானில் சாதனை

மாரத்தான் ஓட்டத்தில் பல சாதனைகளை எட்டியுள்ளீர்கள். உங்களின் மன திருப்திக்காக ஓடுகிறீர்களா?இல்லை ஆரோக்கியத்துக்காக ஓடுகிறீர்களா?

சின்ன வயதில் இருந்தே எனக்கு விளையாட்டு மீது ஆர்வம் இல்லை. 1996-ல் நீரழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்ததால் டாக்டர்கள் அறிவுறுத்தலின்பேரில் நடைபயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். 2004-ல் காரில் சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டதில் எனது தலையில் அடிபட்டது. வலது காலில் உள்ள எழும்புகள் உடைந்தன. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஆறு மாதம் ஓய்வெடுத்தேன். அப்போது டாக்டர்கள், ''நீங்கள் ஓடக்கூடாது. சம்மணமிட்டு அமரக்கூடாது'' என்று வலியுறுத்தினார்கள். அதன்பின்பு நான் யோகா செய்ய ஆரம்பித்தேன். அதன்பின்பு மெதுவாக நடக்க ஆரம்பித்து 2013-ல் இருந்து ஓட ஆரம்பித்தேன். 2014-ல் புதுவையில் முதன் முதலாக 25 கி.மீ மாரத்தான் போட்டியில் பங்கேற்றேன். .சுமார் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடியதால் எனக்குள் நம்மால் ஓட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

வீட்டில் ஓடியும் சாதனை

வீட்டில் ஓடியும் சாதனை

இதனை தொடர்ந்து 2 வருடங்களில் 25 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்றேன். இந்தியாவில் 50 வயதை தாண்டியவர்களில் நான் இந்த சாதனை நிகழ்த்தியதால் எனக்கு இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸில் இடம் கிடைத்தது. அடுத்த 5 வருடங்களில் 100 மாரத்தான் முடித்ததால் இந்தியாவில் நீரிழிவு நோயாளியாக இருந்து இந்த சாதனையை நிகழ்த்தியதால் வேர்ல்ட்ஸ் ரிக்கார்ட்ஸ் யூனியனில் இருந்து டாக்டர் பட்டம் உள்பட பல்வேறு விருதுகள் வந்து குவிய தொடங்கின. அதன் பிறகு 112 மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தேன். பின்னர் கொரோனா காலம் வந்ததால் வீட்டுக்குள்ளேயே ஓட ஆரம்பித்தேன். வீட்டுக்குள்ளேயே மொட்டை மாடியில் எட்டு வடிவில் 4 மணி நேரம் 8 நிமிடம் 18 வினாடிகள் தொடர்ந்து ஓடியதால் அதற்கும் விருது கிடைத்தது.

பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது

பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது

இதுவரை மொத்தம் 124 மாரத்தான் ஓடி இருக்கிறேன். இதில் 16 வெளிநாட்டில் பங்கேற்றவை. இந்தியாவில் 20 மாநிலங்களில் ஓடி இருக்கிறேன். இன்னும் 17 மாநிலங்களில் அதாவது இந்தியா முழுவதும் ஓட முடிவு செய்துள்ளேன். உடல் ஆரோக்கியத்துக்காகவும், வாலிபர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஓடுகிறேன். சில வாலிபர்கள் என்னிடம் வந்து ''சார் நீங்கள்தான் எனக்கு ரோல்மாடல்'' என்று சொல்லும்போது நம்மால் விழிப்புணர்வு ஏற்படுகிறதே என்று பெருமை கொள்வேன்.

பல்வேறு விருதுகள்

பல்வேறு விருதுகள்

மாரத்தான் போட்டியில் நீங்கள் எட்டியிருக்கும் சாதனை என்னென்ன?

2 ஆசிய சாதனை விருதுகள், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறேன். கவுரவ டாக்டர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்று இருக்கிறேன்.

மன நிறைவு அளிக்கிறது

மன நிறைவு அளிக்கிறது

சென்னை மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர்; இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது?

இரண்டு பணிகளிலும் ஓரளவு நிறைவாக பணியாற்றி இருக்கிறேன் என்ற மனநிறைவு உள்ளது.

அதிகாலையில் எழுந்தால் சாதிக்கலாம்

அதிகாலையில் எழுந்தால் சாதிக்கலாம்

குடும்பம், அரசியல், விளையாட்டு. எப்படி மூன்றையும் எதிர் கொள்கிறீர்கள்?

அதிகாலையில் எழுந்தால் எதையும் சாதிக்கலாம். அதிகாலையில் எழுவதால் என்னால் இதை சாதிக்க முடிகிறது. எனக்கு 2 மகன்கள். மூத்த மகன் டாக்டர் இளஞ்செழியன். லண்டனில் மருத்துவராக உள்ளார். மருமகளும் மருத்துவர்தான். எனக்கு 2 பேரக் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகன் அண்மையில் கொரோனாவால் இறந்து விட்டார்.

உயரம் நிர்ணயிக்கவில்லை

உயரம் நிர்ணயிக்கவில்லை

நீங்கள் அரசியலில் தொட விரும்பும் உயரம் என்ன?

சிறு வயதில் கலைஞரை பார்த்தபோது அரசியலில் வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 16 வயதில் இருந்தே சுமார் 45 வருடங்கள் திமுக உறுப்பினராக உள்ளேன். கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். உயரத்தை நிர்ணயித்து நான் அரசியலுக்கு வரவில்லை.

தொகுதிகளின் பணிகள்

தொகுதிகளின் பணிகள்

தொகுதியில் உள்ள தெரு விவரங்கள், புள்ளி விவரங்களை எப்படி சரியாக நினைவில் வைத்து கொள்கிறீர்கள்?

தொகுதியின் மீது உள்ள ஈடுபடுதான் காரணம். நான் எம்.எல்.ஏ.வையும் தாண்டி தொகுதியில் பல பணிகளை செய்து வருகிறேன். 'பசுமை சைதை' என்னும் திட்டம் சார்பில் இதுவரை சுமார் 90,000 மரங்களை நட்டுள்ளோம். சைதை தொகுதியில் உள்ள ஏழை, எளிய, படித்த மாணவ, மாணவர்களுக்கு இலவசமாக கணினி பயிற்சி கற்று தரப்படுகிறது. இவர்களில் பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

கோவில் குளம் தூர்வாருதல்

கோவில் குளம் தூர்வாருதல்

கோவில் குளம் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு மையம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளேன். 14 நாட்கள் தொடர்ச்சியாக நடந்தே சென்று தொகுதி மக்களிடம் குறைகளே கேட்டுள்ளேன். கொரோனா காலக்கட்டத்திலும் தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்துள்ளேன். தொகுதி நிதியில் இருந்து பள்ளிக் கட்டிடங்கள், ரேஷன் கட்டிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை எனக்கு ஒதுக்கிய நிதியில் ஒரு ரூபாய் கூட நிலுவையில் இல்லாமல் செய்து முடித்துள்ளேன்.

ஏழ்மைதான் காரணம்

ஏழ்மைதான் காரணம்

எல்லோரிடமும் எளிமையாக எப்படி பழகுகிறீர்கள்?

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் ஏழ்மை குறித்து தெரியும். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதும் தெரியும்.

அரசியலுக்கு நிறம் தேவையில்லை

அரசியலுக்கு நிறம் தேவையில்லை

நிறமும், ஒப்பனையும் அரசியலுக்கு அவசியமில்லையா?

அரசியலுக்கு நிறமும், ஒப்பனையும் அவசியமில்லை என்று என்னை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். நமது இயல்பான தன்மையே அரசியலுக்கு போதும்.

வெற்றி பெற்றால் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதா?

அப்படி ஒரு எண்ணத்துடன் உழைக்கவில்லை. எம்.எல்.ஏ. ஆவதற்கே உழைக்கிறேன்.

ஸ்டாலின் குணம் இதுதான்

ஸ்டாலின் குணம் இதுதான்

கருணாநிதி மற்றும் ஸ்டாலின் கட்சி தலைமை குறித்து உங்கள் கருத்து என்ன?

கலைஞர் உலகத் தலைவர்களில் ஒருவர். அவர் தொடாத சாதனைகள், உயரங்கள் இல்லை. ஸ்டாலினின் உழைப்பு மிகவும் போற்றத்தக்கது. அவர் நண்பர்கள், அனைவரிடமும் பழகும் விதம் அருமை. அவர் சென்னை மேயராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து ஆற்றிய பணிகள் அனைவருக்கும் முன்மாதிரியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+