மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு.. காவல்துறை சொன்ன காரணம்.. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: திருமணம் செய்து ஏமாற்றியதாக நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகார் மீதான விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல பிரபலங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு ஸ்டார் சமையல் கலைஞராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஸ்ருதி என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி, 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவுடன் காதல் ஏற்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவுக்கு தாலி கட்டியுள்ளார். ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மூலம் கர்ப்பமான நிலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தான் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பே ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்தார். மேலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.
தனது புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி, மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ஜாய் கிரிசில்டா.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜாய் கிரிஸ்டில்லா கர்ப்பிணியாக இருந்ததால் விசாரணைக்கு அழைப்பதில் சிக்கல் இருந்தது என காவல்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜாய் கிரிசில்டா அளித்த புகார் மீதான விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜை சீண்டி சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். தைரியம் இருந்தால் டிஎன்ஏ சோதனைக்கு வருமாறு மாதம்பட்டி ரங்கராஜை அழைத்துள்ளார் ஜாய் கிரிசில்டா.












Click it and Unblock the Notifications