மனைவியின் தோழியை பலாத்காரம் செய்து நிர்வாண படம் எடுத்து மிரட்டியவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மனைவியின் தோழியை பலாத்காரம் செய்ததோடு நிர்வாண படம் எடுத்து மிரட்டிய நபருக்கு ஜாமீன் தர சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை: வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து நிர்வாணமாக படம் எடுத்தது மிரட்டிய நபரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நபருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டால் தன்னை வந்து தொந்தரவு செய்வார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கேட்டவரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 36 வயதான பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியை பார்க்க அவர் சென்றிருந்தபோது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த தோழியின் கணவர் மகேஷ்குமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, நிர்வாணமாக படம் எடுத்து வைத்துள்ளார்.

நிர்வாண படத்தை காண்பித்து மிரட்டி அப்பெண்ணிடம் இருந்து சுமார் 100 பவுன் நகை மற்றும் ஏராளமான பணத்தை மிரட்டி பெற்றுக் கொண்டதாகவும், அதனை திருப்பி கேட்ட போது போது தன்னையும் தனது கணவர் மற்றும் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தவிர பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடியாட்களை கூட்டி வந்து மிரட்டியதாகவும், அப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாகவும் ராயபுரம் காவல் நிலையத்தில் நிலையத்தில் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கோரி அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் தன்னை பலாத்காரம் செய்து மிரட்டியவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி புகார்தாரரான பாதிக்கப்பட்ட பெண் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் மீண்டும் வந்து தனக்கு தொல்லை கொடுப்பார் எனவும், ஆதாரங்களை அழித்து விடுவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி செல்வகுமார், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications