மொத்த பணத்தையும் கட்டணும்.. தவெகவுக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்! காரணம் இதுதாங்க!
சென்னை: தமிழக வெற்றக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. குறிப்பாக, பொது சொத்துக்கள் சேதம் ஆகும் பட்சத்தில் மொத்த தொகையையும் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
தமிழக வெற்றக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை செய்ய உள்ள இடங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தவெக சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, "திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் போலீசாரால் விதிக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனை கருத்தில் கொண்டு விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பேரணி பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் காவல்துறை அனுமதி வழங்குகிறது. அதேபோல தவெகவுக்கும் பாரபட்சம் இல்லாமல் அனுமதி வழங்க கோரியும் நாங்கள் கடந்த 9 மற்றும் 15ஆம் தேதிகளில் டிஜிபியிடம் மனு கொடுத்து இருக்கிறோம்.
நாங்க எப்படிங்க சொல்ல முடியும்?
இருப்பினும் காவல்துறை எங்களுக்கு நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை, மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளையும் எங்களுக்கு விதித்திருக்கிறது. எந்த வழியில் சென்னை திரும்ப வேண்டும்? எத்தனை வாகனம் வரவேண்டும்? என்றும் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என்று நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என்று நாங்கள் எப்படி கூற முடியும்? எனவே யதார்த்தத்திற்கு பொருந்தும் நிபந்தனைகளை காவல்துறை விதிக்க வேண்டும்" என்று வாதாடியிருந்தார்.
கட்அவுட் மேல் ஏறிய தவெகவினர்
இதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸ் தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜ் திலக், "எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படாமல் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது" என்று கூறியிருந்தார். அதேபோல, திருச்சி பரப்புரை போது தவெக தொண்டர்கள் செய்ததையும் கட்அவுட் மேல் ஏறி நின்ற புகைப்படத்தையும் நீதிபதியிடம் வழக்கறிஞர் காட்டினார். இதனை அடுத்து நீதிபதி காட்டமாக சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
"போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? சட்டத்திற்கு மேலானவர்கள் என்று யாரும் கிடையாது. பொதுக்கூட்டம் நடத்தினாலும், மாநாடு நடத்தினாலும், சட்டத்துக்கு உட்பட்டுதான் நடத்த வேண்டும். தலைவராக இருக்கும் நீங்கள் தானே கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்? பொது சொத்துக்களை சேதப்படுத்தக் கூடாது. சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்க பட்டதா" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இல்லையெனில் நீதிமன்றம் இதில் தலையிட நேரிடும் என்றும் எச்சரித்து இருந்தார். மட்டுமல்லாது கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை வைத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே என்றும் அறிவுறுத்தி இருந்தார்.
விஜய் ரசிகர்களின் அட்டகாசம்
நீதிமன்றம் இப்படி காட்டமாக பேசியிருப்பதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் கடந்த காலங்களில் தவெக தொண்டர்கள் செய்த அத்துமீறல்கள் பொதுமக்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியிருந்தன. கடந்த ஜூலை மாதம், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், சிவகங்கையில் கோயில் காவலாளி போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதை கண்டித்து தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்று பேசியிருந்தார். ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் விஜய் ரசிகர்கள் கூடியிருந்ததால், சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் சேதமடைந்திருந்தன. இதனையடுத்து, சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் புகார் அளித்திருந்தார். புகாரின் பெயரில், அரசின் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
முக சுழிப்பை ஏற்படுத்திய தவெக ரசிகர்கள்
அதேபோல மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்திருந்த ரசிகர்கள் செய்த செயல் பொதுமக்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது. அதாவது மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. நாற்காலிகளை வாடகைக்கு விட்டவர்கள், ஆயிரக்கணக்கில் சேர்களை கொண்டு வந்ததாகவும், அதில் சில நூறு சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன என்றும் வேதனை தெரிவித்திருந்தனர்.
இப்படி ரசிகர்களின் அத்துமீறிய செயல்கள் காரணமாகவே, நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பயன்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு!












Click it and Unblock the Notifications