ஷிண்டே மீதான விமர்சனம்.. நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமீன் மனுவை முடித்துவைத்த சென்னை ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமீன் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆனதை விமர்சித்திருந்தார்.

Madras High Court Closes Kunal Kamra s Anticipatory Bail Plea Citing Interim Relief from Mumbai HC

இதனால் ஆத்திரம் அடைந்த ஏக்நாத் ஷிண்டேவின் கட்சி தொண்டர்கள் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். சிவசேனா கட்சியினர் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் குணால் கம்ரா மீது ஒரு வழக்கு மற்றும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவை சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீது 2 வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்தது.

இதையடுத்து, குணால் கம்ரா இந்த வழக்கில் தனக்கு டிரான்சிட் முன் ஜாமீன் (வேறு மாநிலத்தில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு) கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தான் விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் தன்னை போலீசார் கைது செய்வார்கள் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குணால் கம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குணால் கம்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், வழக்கை ரத்து செய்யக் கோரி குணால் கம்ரா தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை குணால் காம்ராவை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் மோகன், மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதால் இங்கு வழக்கை தொடர்ந்து நடத்த அவசியமில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+