சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஜிபி சைலேந்திர பாபு நடவடிக்கை அருமை.. ஆர்டர்லி வழக்கில்.. மனதார பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவன்.. முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு

    காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

     Madras High Court Lauds Tamil Nadu DGP Sylendra Babu Over Orderly Issue

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால் நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.

    ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மைச் செயலாளாரின் உத்தரவை செயல்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, காவல்துறை பணியை நீதிமன்றம் குறைத்து மதிப்பிடவில்லை எனவும், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லெண்ணம் காரணமாக ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும், அனைவருக்கும் ஒரு உதவியாளர் தேவை என்ற போதிலும், மக்களின் வரிப்பணம் வீணாவது கவலை அளிக்கிறது என அதிருப்தி தெரிவித்ததுடன், ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தாலும் அவர்கள் அமுக்கப்படுகின்றனர் அல்லது சுடப்படுகின்றனர் என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிப்பது உதவியாக உள்ளதாக தெரிவித்த அரசு தரப்பு, காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியது. மேலும், பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. ஒரு காவல் உயர் அதிகாரி வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்தப்பட்டால் மாதத்துக்கு இரண்டரை லட்ச ரூபாயை அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ பி எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், அதனை டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக டிஜிபியே உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், டிஜிபி சைலேந்திர பாபு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும் பாராட்டுக்குரியது எனவும் நீதிபதி கூறினார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதிப்பூண்டுள்ளது தெரிவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

    குறிப்பாக, பயிற்சி பெற்ற காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்பட கூடாது என்று தெரிவித்த நீதிபதி, உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை நியமிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். காவல்துறையில் உள்ள வாகனங்களும், முன்னேறிய நடைமுறையும் தவறாக பயன்படுத்தபடக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

    அதன் பின்னர், இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    English summary
    Madras High Court Lauds Tamil Nadu DGP Sylendra Babu Over Orderly Issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X