வருமானம் இல்லையா? அப்போ கோவிலை எல்லாம் மூடிடலாமா? அரசிடம் கேள்வி எழுப்பிய ஹைகோர்ட் நீதிபதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, சம்பளம் உயர்வு வழங்கிட கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோவில் ஊழியர் சம்பள குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பிறபித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் வருமானம் இல்லாத கோவில்களை மூடி விடலாமா? எனவும் கேள்வி கேள்வி எழுப்பினர்.

நெல்லை சேர்ந்த நரசிம்ம கோபாலன் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில், அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படியும், அரசு ஊழியர்களுக்கு இணையாகவும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

High Court Temple hrce

தற்போது அறநிலையத்துறையின் சுற்றறிக்கைகள் மூலம் கோவில் ஊழியர்களுக்கான ஊதியம் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால், குறைந்த வருமானம் கொண்ட கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தைப் பெற்று கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, அந்தந்தக் கோவில்களின் வருமானத்தைக் கருத்தில் கொள்ளாமல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குடும்பம் நடத்த குறைந்த பட்சம் 10 ஆயிரமாது தேவை. ஆனால், கோவில் அர்ச்சகர்களுக்கு 4 ஆயிரம் தான் கொடுக்கிறார்கள் என கருத்து தெரிவித்தனர்.

அரசுத்தரப்பில் கோவில் வருமானத்தை பொறுத்து ஊதியம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்ட நிலையில்,
அப்போது வருமானம் இல்லாத கோவில்களை மூடி விடலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக ஏற்கனவே நீதிபதி மகாதேவன் பிறபித்த உத்தரவை பின்பற்ற வேண்டும்" என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+