நாளை போராட்டம் நடத்த கூடாது! மின்வாரிய ஊழியர்களுக்கு திடீர் தடைவிதித்த.. சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

"சட்டவிரோதமானது"
அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழியர் சங்கங்கள் கோரிக்கை தொடர்பாக டான்ஜெட்கோ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் , மின்சார வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது. பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, டான்ஜெட்கோவின் நிதிநிலை, எதிர்வரும் பொங்கல் பண்டிகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளாமல் இந்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. எனவே, இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும்"
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே.எம். விஜயன் மற்றும் மனோகரன் முன்வைத்த வாதம்: தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை துவங்கிய பிறகு, வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது. ஆதலால், இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். சட்டப்படி, வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு 6 வாரங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால், மின்சார வாரிய ஊழியர்கள் அவ்வாறு செய்யவில்லை என அவர்கள் வாதிட்டனர்.

"அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும்"
மேலும், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மின்வாரிய ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது என்றும், இதுகுறித்த அறிவிப்பை கடந்த 5-ம் தேதியே அனுப்பப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும், வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருப்பது சட்டவிரோதமானது எனவும் வாதிட்டார். மேலும், மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். எனவே, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை
இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கம் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும் என்றும், பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் அதன் முடிவுகளை தெரிந்துகொள்ளும் முன்பு வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது எனவும் கூறிய நீதிபதிகள், வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications