• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மதராசபட்டினம் விருந்து.. பாரம்பரிய உணவு சாப்பிடுங்க.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் அசத்தல் பேச்சு

|

சென்னை: சென்னையில் மதராசபட்டினம் விருந்து உணவு திருவிழாவில் பேசிய முதல்வர் பழனிச்சாமி பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் விருந்து என்ற உணவு மற்றும் கலாச்சார திருவிழா இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

madrasapattinam virundhu food festival on chennai : tn cm says Eat traditional food

இந்த விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, சரோஜா, ஜெயக்குமார்,தங்கமணி, விஜய பாஸ்கர், சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் பழனிச்சாமி, உள்ளாட்சிதுறை, சத்துணவுத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து இந்த மதராசபட்டினம் விருந்து உணவு திருவிழாவை நடத்துகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் அதிக சக்தியுள்ள இளநீர், மோர், பழச்சாறு அருந்ந வேண்டும். மக்களுக்கு தரமான உணவு கிடைக்க வைப்பது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், சென்னை தீவுத்திடலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு திருவிழா வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. பசி எடுத்த பிறகே சாப்பிட வேண்டும். இதை நாம் கடைபிடித்தால் நோய்கள் அண்டாது. இப்பொழுது எல்லாம் இளம் வயதிலேயே மக்களுக்கு ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியவற்றுக்கு உணவு பழக்க வழக்கம் காரணம்.

நம் முன்னோர்களின் உணவான சாமை, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, சோளம், போன்ற இதர நவதானியங்களை அன்றாடம் பயன்படுத்தினாலும் அதற்கு ஏற்ற உடல் உழைப்பை கொண்டு வாழ்ந்ததினால் தான் அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் ஆகியவை அரிதாக காணப்பட்டது. நம் அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவை சேர்ப்பதுடன் உடல் பயிற்சியையும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும். உடல்பயிற்சி எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் யோகா பயிற்சி அவசியம்.அது மனதுக்கு புத்துணர்வு அளிக்கும். யார் ஒருவருக்கு நோய் இல்லையோ அவர்கள் மிகுந்த செல்வர் ஆவார்" என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
madrasapattinam virundhu food festival on chennai : tn cm said Eat traditional food, tn dy cm said Do not drink foreign beverages
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more