மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை தொடங்குங்கள்... மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்காக முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குனர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

மு.க ஸ்டாலின் கடிதம்

மு.க ஸ்டாலின் கடிதம்

எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்காக முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் விறுவிறு

குஜராத்தில் விறுவிறு

தற்போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2020இல் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான கட்டட பணிகள் துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

தொடங்காத எய்ம்ஸ் பணிகள்

தொடங்காத எய்ம்ஸ் பணிகள்

அதே நேரத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதற்காக சில குழுக்களும் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை. அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.

உதயநிதி பிரசாரம்

உதயநிதி பிரசாரம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் போது, மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இது தான் என உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை எடுத்துக்கொண்டு போய் பிரச்சாரம் செய்தார். இது பல இடங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடிதம் எழுதிய மு.க ஸ்டாலின்

கடிதம் எழுதிய மு.க ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+