ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இப்போது அடிமட்டம் முதல் உச்சம் வரை முழுமையான மறுசீரமைப்புக்கு தயாராகி வருகிறது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தோல்வியின் வலியிலிருந்து கட்சியை மீட்டெடுக்கும் வகையில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடி மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளார்.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய உருவாக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை வெளியான உடனேயே, "ஆபரேஷன் அறிவாலயம்" என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான அமைப்பு ரீதியான அறுவை சிகிச்சை தொடங்கும் என அறிவாலய வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Stalin

மாவட்டச் செயலாளர்கள் பதவிகளில் பெரும் புயல்

திமுகவின் முதுகெலும்பாகக் கருதப்படும் மாவட்டச் செயலாளர்கள் பதவிகளில் இந்த முறை மிகப்பெரிய தலைகீழ் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தேர்தல் பணியில் அலட்சியம் காட்டியது, உள்கட்சி கோஷ்டி பூசல்களை ஊக்குவித்தது, கட்சி பணத்தை செலவு செய்யாமல் சுருட்டியது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய பல மூத்த மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பதவிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின், "வெற்றியை நாம் கொண்டாடினால், தோல்விக்கும் நானே பொறுப்பேற்கிறேன். ஆனால், கட்சிப் பணிகளைச் சரிவரச் செய்ய முடியாதவர்கள் தாராளமாக விலகிக் கொள்ளலாம்" என்று கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கை இப்போது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களாக ஒரே மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பழைய தலைகளுக்கு பதிலாக, தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக உழைத்த இளம், புதிய முகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

78-லிருந்து 115 ஆக உயரும் மாவட்டங்கள்

திமுகவின் தற்போதைய 78 உட்கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்த்தப்படும் என்பது உறுதியாகிவிட்டது. நிர்வாக வசதி, மக்களுடனான நெருக்கம் மற்றும் தொண்டர்களை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சில மாவட்டச் செயலாளர்களின் கீழ் 5 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகள் வரை உள்ளன. இதனால் முழு கவனமும் செலுத்த முடியவில்லை என்ற புகார் எழுந்தது.

புதிய திட்டத்தின்படி, ஒரு மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்சம் 3 தொகுதிகள் மட்டுமே வரும் வகையில் எல்லைகள் பிரிக்கப்படும். இதன் மூலம் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பு வலுப்பெறும் என்று தலைமை நம்புகிறது.

இளைஞர்களுக்கு பெரும் வாய்ப்பு - பாயும் புதிய ரத்தம்

2026 தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் வாக்காளர்களின் வாக்குகள் பெருமளவு திசைமாறியதை உணர்ந்த திமுக தலைமை, இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. மாவட்டம், ஒன்றியம், கிளை அளவில் அதிகபட்ச வயது வரம்பு (Age Limit) கொண்டுவரும் யோசனையும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

களத்தில் நின்று வேலை செய்யும் மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புகளில் 35 முதல் 50 வயதுக்குட்பட்ட சுறுசுறுப்பான இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உயர்மட்டப் பதவிகளான பொதுச்செயலாளர், பொருளாளர் போன்றவற்றில் மூத்த தலைவர்கள் நீடிக்கலாம் என்றாலும், அடிமட்ட அமைப்புகளில் புதியபி ரத்தம் பாயும் என உறுதியாகத் தெரிவிக்கப்படுகிறது.

எப்போது தொடங்கும் 'ஆபரேஷன் அறிவாலயம்'?

உண்மை கண்டறியும் குழு அறிக்கை கிடைத்தவுடன், ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து மாற்றங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்பு, திமுகவை மீண்டும் வலுவான எதிர்க்கட்சியாகவும், எதிர்காலத்தில் வெற்றி பெறும் சக்தியாகவும் மாற்றும் எனக் கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.

தோல்வியைத் திருப்பி வெற்றியாக மாற்றும் ஸ்டாலினின் இந்த துணிச்சலான முயற்சி, தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தொண்டர்கள் இந்த மாற்றங்களை வரவேற்கும் வகையில், கட்சியின் அடிமட்டத்தில் புதிய உற்சாகம் பிறக்கும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+