Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமை தொகை: புதிய விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 15-ல் ரூ.1,000.. சட்டசபையில் அறிவித்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி விரிவாக பேசினார். அப்போது அவர் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் ரூ.1,000 கிடைக்கும் என்று கூறினார். மேலும் பலர் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிகளை முதல்வர் ஸ்டாலின் திருத்தியுள்ளார் என்றும் கூறினார்.

magalir urimaithogai Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன் தினம் முதல் நடந்து வருகிறது. இதில் இன்று சட்டசபையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

* மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 30,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை கேட்டு 28 லட்சம் பெண்கள் மனு அளித்துள்ளனர்.
* 28 லட்சம் பேரின் மனுக்களையும் ஆய்வு செய்து தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
* மேலும் பலர் பயன்பெறும் வகையில், மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிகளை முதல்வர் ஸ்டாலின் திருத்தியுள்ளார்.

4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கும்

* அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* முதியோர் உதவித் தொகை பெறுபவர்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

* புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
* கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மகளிருக்கு ரூ.26,000

* ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 14 லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மகளிருக்கும் சுமார் 26 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
* இதுவரை தமிழகத்தில் 9,055 முகாம்கள் (உங்களுடன் ஸ்டாலின்) அமைக்கப்பட்டு உள்ளன.
* உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.

* உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அனுப்பப்பட்ட மனுக்கள் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் வரும் நவர்பர் 30 ஆம் தேதிக்குள் முடிவடையும்.
* இதையடுத்து டிசம்பர் 15 ஆம் தேதி முதல் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றி பேசினார்.

ஸ்டாலினின் கனவு திட்டம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கனவு திட்டங்களில் ஒன்றாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகுந்த கவனம் பெற்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

விடுபட்ட மகளிர், உரிமைத்தொகைக்க் விண்ணப்பித்து விட்டு தங்களுக்கு எப்போது கிடைக்கும் என ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில்தான், மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்பது பற்றிய அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+