சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ.. அலறியடித்து ஓடிய மக்கள்
சென்னை: சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடையின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கரும்புகை சூழ்ந்துள்ளது. 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். ஊழியர்கள் யாரும் உள்ளே சிக்கியிருக்கிறார்களா என்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள்.
சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஜவுளிக்கடை, நகைக்கடைகள் அதிகளவில் இருக்கும் என்பதால் விடுமுறை தினங்கள் மட்டுமின்றி எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக தி நகர் ரங்கநாதன் தெரு எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த தெருவில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. கடையில் இருந்த ஊழியர்களும் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். அதிகளவில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறார்கள். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரையும் வர விடாமல் தடுப்புகளை அமைத்தனர்.
மேலும் தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்குள்ளும் கரும்புகை பரவுவதால் அங்கிருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications