சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"போனிற்கு வந்த மெசேஜ்".. ஒருவரும் தப்பிக்க முடியாது.. ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு.. மெகா நியூஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரசு சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ரேஷனில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிகளை மனதில் வைத்து ரேஷன் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கும் விதமாக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

முக்கியமாக எஸ். எம். எஸ் மூலமாக பில் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது ரேஷன் பொருட்களை வாங்கியவர்களுக்கு எஸ். எம். எஸ் மூலமாக அவர்கள் இணைத்து இருக்கும் போன் எண்ணுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என்று உறுதி செய்வதற்காக பில் அனுப்பப்படும்.

ரேஷன் கடைகளுக்கு ஸ்ட்ராங் உத்தரவு.. இனிமே இப்படித்தான்.. ஆக்‌ஷனில் ஆபீசர்ஸ்.. மக்கள் செம்ம ஹேப்பிரேஷன் கடைகளுக்கு ஸ்ட்ராங் உத்தரவு.. இனிமே இப்படித்தான்.. ஆக்‌ஷனில் ஆபீசர்ஸ்.. மக்கள் செம்ம ஹேப்பி

ரேஷன்

ரேஷன்

ரேஷன் பொருட்கள் திருடு போவதை தடுக்க இப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் ரேஷனில் போய் சர்க்கரை வாங்குகிறீர்கள். மற்ற பொருட்கள் எதுவும் வாங்கவில்லை. இதையடுத்து நீங்கள் சர்க்கரை வாங்கியதற்கான பில் உங்களுக்கு வரும். போனில் நீங்கள் எவ்வளவு சர்க்கரை வாங்கினீர்கள் என்ற விவரம் இருக்கும். நீங்கள் வாங்காத பொருட்கள் அதில் இருந்தால் நீங்கள் புகார் கொடுக்க முடியும்.

திருட்டு

திருட்டு

அதாவது நீங்கள் அரிசி, பருப்பு வாங்காத பட்சத்தில் அந்த பொருட்கள் பற்றி புகார் கொடுக்க முடியும். அரிசி, பருப்பு ஆகியவை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில ரேஷன் ஊழியர்கள் மக்கள் அரிசி வாங்காமலே அதை வாங்கியதாக பில் போடும் வழக்கம் இருந்து வருகிறது. பின்னர் மக்கள் வாங்காத அரிசியை குறைந்த விலைக்கு வெளிமாநிலங்களில் விற்பனை செய்வார்கள். கேரளாவில் இது போல தமிழ்நாடு அரிசி அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

உத்தரவு

உத்தரவு

சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் முத்திரை இடம்பெறும். அதற்கு மேலே க்யூ ஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது திருடி வெளியே விற்றால் இதை வாங்க கூடாது.

அரிசி மூட்டைகள்

அரிசி மூட்டைகள்

அதோடு இதை விற்பவர்கள் பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி, நெல் திருட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு ரேஷன் கடைகள் கடந்த சில மாதங்களாக நவீனமயமாகி வருகிறது. முக்கியமாக ரேஷன் கடைகளில் தற்போது கணினி மூலம் பொருட்கள் இருப்பு குறித்து அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது..

விற்பனை

விற்பனை

இந்த நிலையில்தான் கடத்தலை தடுக்க தற்போது ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. போலி பில் போடும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் சில நெட்டிசன்கள் இது தொடர்பாக இணையத்தில் புகார் வைத்து இருந்தனர். நான் அரிசி வாங்கவே இல்லை. ஆனால் எனக்கு அரிசி வாங்கியதாக பில் கொடுத்துள்ளனர். இது என்ன நியாயம்.

உத்தரவு

உத்தரவு

நான் வாங்காத அரிசியை யாருக்கு கொடுத்தீர்கள் என்று நெட்டிசன்கள் சிலர் போஸ்ட் போட்டு வந்தனர். ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாகப் புகார்கள் அதிகம் வந்த நிலையில் இது தொடர்பாக கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொய்யாக பில் போட்டு, வெளியே பொருட்களை விற்க கூடாது என்று கூட்டுறவுத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாகவே, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில்தான் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.

ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகள்

ரேஷன் பொருட்கள் வேறு ஆட்கள் வாங்கி பில் போடுவதை தடுக்கவே, தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும். கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். மாநிலம் முழுக்க விரைவில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

English summary
MAJOR NEWS: Big announcement for Ration Shops amid the raising fake bill complaints.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X