வருமானம் ஈட்ட செம சான்ஸ்! உங்களிடம் பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் பேஜ் இருக்கிறதா? இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களிடம் பிரபலமான பேஸ்புக் பேஜ் இருக்கிறதா? இன்ஸ்ட்டா, ட்விட்டர், கூ போன்ற செயலிகளில் உங்கள் பக்கங்களுக்கு நிறைய பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்களா? அப்போ உங்களுக்கான செய்திதான் இது! நீங்கள் நடத்தும் அந்த சமூக வலைதள பக்கங்களை வைத்தே நிறைய சம்பாதிக்க முடியும்! ஆம் உங்கள் சமூக வலைதள பேஜ்களை வைத்து வருமானம் ஈட்ட வழி செய்கிறது தேசிபேர்ல்!

சமூக வலைத்தளங்களின் வழியாக வருமானம் ஈட்டுவது இப்போது ஒரு தொழிலாக மாறிவிட்டது. சமூக வலைத்தளங்களில் பிற நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்வது, ப்ரோமோஷன் செய்வதன் மூலமே நாம் இப்போது வருமானம் ஈட்ட முடியும். அந்த வகையில்தான் தேசிபேர்ல் நிறுவனம் ப்ரோமோஷன் மூலம் உங்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது.

Make money from your Facebook Fan pages through Desipearl

முதலில் உங்களுக்கு பேஸ்புக் / இன்ஸ்டா/ ட்விட்டர்/ கூ போன்ற செயலிகளில் அதிக பின் தொடர்பாளர்கள் கொண்ட பக்கங்கள் இருக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் மீம் பேஜ்கள், ஃபேன் பேஜ்கள், தகவல் பகிரும் பேஜ்கள் போன்றவை.

சரி தேசிபேர்ல் வழங்கும் இந்த வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ளும் முன் தேசிபேர்ல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேசிபேர்ல் என்றால் என்ன?

தேசிபேர்ல் என்பது ஒரு கன்டென்ட் மார்க்கெட்டிங் பிளாட்பார்ம். அதாவது செய்திகளின் இணைப்புகளை இதன் மூலமாக மற்றவர்களிடம் கொண்டு செல்லலாம். அதாவது பல்வேறு நிறுவன கண்டெண்ட்களை மார்க்கெட் செய்யும் நிறுவனம். 2014ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது தேசிபேர்ல் (Desipearl). பல இணையதளங்கள், இதைப் பயன்படுத்தி வருகின்றன, பலனடைந்தும் வருகின்றன. 200க்கும் மேற்பட்ட கண்டெண்ட்கள் தினமும் 8க்கும் மேற்பட்ட மொழிகளில் இதில் மார்க்கெட் செய்யப்பட்டு வருகின்றன. 300க்கும் அதிகமான பேஸ்புக் பக்கங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

அரசியல், சினிமா, விளையாட்டு, லைப்ஸ்டைல், டெக்னாலஜி, ஆட்டோமொபைல், பிசினஸ் என அனைத்து வகையான செய்திகளும், ஆங்கிலம், தமிழ் கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளில் இந்த தேசிபேர்ல் மூலம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த பக்கத்தில் கணக்கு தொடங்கி. அதன்பின் நீங்கள் ஒன்இந்தியா செய்திகளை உங்கள் பேஸ்புக் பேஜ்களில் பகிர்ந்து வருமானம் ஈட்ட முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்!

எப்படி கணக்கு தொடங்குவது?

#1: இந்த பக்கத்தை கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யவும் - https://www.desipearl.com/
#2: உங்கள் பேஸ்புக் / இன்ஸ்டா/ ட்விட்டர்/ கூ பக்கத்தை தேசிபேர்ல் தளத்தில் கொடுக்கவும். அந்த பக்கங்களை சோதனை செய்து தகுதி இருக்கிறதா என்று அப்ரூவ் செய்தவுடன், உங்களுக்கு டேஷ்போர்ட் திறக்கும்
#3: உங்களுக்கு அப்ரூவல் கிடைத்தவுடன் நீங்கள் ஒன்இந்தியா லிங்குகளை உங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் இந்த டேஷ்போர்ட் வழியாக பகிர வேண்டும்.
#4: இப்படி நீங்கள் பகிரும் ஒன்இந்தியா லிங்குகளின் ஒவ்வொரு கிளிகிற்கும் (ஒவ்வொரு நபர் லிங்கை கிளிக் செய்யும் போதும்) நீங்கள் வருமானம் ஈட்ட முடியும்

ஒன்இந்தியா செய்திகள்

ஒன்இந்தியாவில் அரசியல், நாட்டு நடப்பு, பிளாஷ் நியூஸ், விளையாட்டு, உலக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், சினிமா செய்திகள், பொருளாதாரம், கல்வி என்று பல துறைகளில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தேசிபேர்ல் பக்கத்தில் கணக்கு தொடங்கி அதன்பின் நீங்கள் உங்கள் பேஸ்புக் பேஜ்களில் எங்களின் லிங்கை ஷேர் செய்தால் போதும். ஒவ்வொரு நபரும் அந்த லிங்கை கிளிக் செய்யும் போதும் நீங்கள் வருமானம் ஈட்ட முடியும்.

8 மொழிகளில் நாங்கள் செய்திகளை வெளியிடுகிறோம். நீங்கள் எந்த மொழியில் செய்தி லிங்குகளை வெளியிட விரும்பினாலும் வெளியிடலாம். ஒருநாளுக்கு எத்தனை லிங்க் வெளியிட வேண்டும் என்று கேட்கிறீர்களா?

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை செய்திகளையும் போடலாம். ஒரு செய்தி மட்டும் கூட போடலாம். 10 செய்திகளையும் கூட போடலாம். உங்களுக்கு என்ன மாதிரியான செய்தி தேவையோ அதை நீங்களே தேர்வு செய்து போட்டுக் கொள்ளலாம்.

பணம் கிடைக்கும்

இதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கவும் முடியும். அதாவது நீங்கள் பகிரும் எங்களின் லிங்கை ஒருவர் கிளிக் செய்கிறார் என்றால் அந்த ஒரு கிளிக்குக்கு குறிப்பிட்ட தொகை உங்களுக்குக் கிடைக்கும். புதிய யூசர் ஒருவர் வந்து கிளிக் செய்கிறார் என்றால் அது "யூனிக் கிளிக்"குகள் என்று கணக்கில் வைக்கப்படும். இந்த கிளிக்குகளுக்கு உங்களுக்கான கட்டணம் தீர்மானிக்கப்படும்.

மாதந்தோறும் உங்களது இன்வாய்ஸ் தயாரிக்கப்பட்டு, மாதந்தோறும் கடைசி 30ம் தேதியன்று உங்களுடைய பணம் உங்களுக்கு வந்து சேரும். உங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்திலிருந்து TDS பிடித்தம் செய்யப்பட்டுத் தரப்படும். ஒருவேளை ஒரு மாதத்தில் உங்களுக்கு ரூ. 1100 கட்டணம் வரவில்லையென்றால் அந்தத் தொகையானது அடுத்த மாதத்துடன் சேர்த்துத் தரப்படும். எனவே பான் கார்டு கட்டாயம் இருப்பது நல்லது.

ஆனால் ஒரே பேஸ்புக் யூசர் மீண்டும் மீண்டும் லிங்கை கிளிக் செய்து கொண்டே இருந்தால்., அதாவது ஒரே ஐபி முகவரியிலிருந்து பலமுறை செய்யப்படும் கிளிக்குகள் கணக்கிடப்பட மாட்டாது. எனவே அதைத் தவிர்த்தல் நல்லது.

இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க.. இப்போதே தேசிபேர்ல் பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.. ஒன்இந்தியா லிங்குகளை ஷேர் செய்யுங்கள்.. வருமானத்தை அள்ளிடுங்கள்.

கூடுதல் தகவல்களுக்கு [email protected] க்கு மெயில் செய்யவும் அல்லது https://www.desipearl.com/ பக்கத்தை பார்க்கவும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+