தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு ம.நீ.ம. வேட்பாளர்கள் அறிவிப்பு; புதுவையிலும் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 4 தொகுதிகளுக்குவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவித்துளளது.
தமிழகம், புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் (எஸ்யூசிஐ) ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. மக்கள் நீதி மய்யம் தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகிறது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் 4 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சோளிங்கர் -ஜவகர், அரக்கோணம்(தனி) பாஸ்கரன், ஆத்தூர்(திண்டுக்கல்) சிவசக்திவேல், வேடசந்தூர் - வெற்றிவேல் ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் புதுவையிலும் 5 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாஹே - ஜலால், நெடுங்காடு - அரவிந்த்ராஜ், திருநள்ளாறு - பிச்சராசு, காரைக்கால்(தெற்கு) - சூசை, நிரவி - முகமது ஹாஜா பத்ருதீன் ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications