சிங்கார சென்னையில் 'செத்துப்போன' ஆறுகள்.. விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம் தான்! மநீம எச்சரிக்கை!
சென்னை : சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது
தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் இல்லை
இதையொட்டி, தமிழ்நாட்டின் தலைநகரில் பாய்ந்தோடும் முக்கிய ஆறுகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில், பல்வேறு இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், அடையாறு, கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இங்குள்ள நீர் எந்த வகை உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை
பக்கிங்காம் கால்வாயின் நிலையும் ஏறக்குறைய இதேதான். உண்மையில், குப்பை, கழிவுகளால் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் தண்ணீர் ஏற்கெனவே பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது. தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதி செய்துள்ளது. நகரமயமாக்கலின் விளைவுகளும், குப்பை மற்றும் கட்டிட, ரசாயன, மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் இந்த நீர்நிலைகள் பெரிதும் மாசடைந்துள்ளன. சிங்காரச் சென்னை திட்டங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்தபோதும், எந்த மாற்றமும் நிகழவில்லை.

வெட்கக் கேடானது
நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்துகொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நீர்நிலைகளையே எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வது வெட்கக்கேடானது. இனியும் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும். நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாசடையாமல் தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

விழிப்புணர்வு
அதேசமயம், பொதுமக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுவது அவசியமாகும். நீர்நிலைகள் நம் எல்லோருக்குமானது என்பதை உணர்ந்து, முடிந்த அளவுக்கு நீர்நிலைகளை மாசுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழக அரசு மட்டுமின்றி, பொதுமக்களும், தன்னார்வலர்களும் இணைந்து மரணித்துக் கொண்டிருக்கும் நீர்நிலைகளை உயிர்ப்பிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications