சென்னை அடையாறு பொதுமக்களே.. வரும் புதன்கிழமையை மறந்துவிடாதீங்க... முக்கிமான சம்பவம் நடக்குது!
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நாளை மறுநாள் (புதன்கிழமை) மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். அவரை அடையாறு எல்.பி. ரோட்டில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னைமாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட எல்.பி. சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் ஆர்.பிரியா மண்டலம்-13க்குட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-13க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்து வரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் பிரியா கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி தாக்கல் செய்தார்.அப்போது தான் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை "மக்களைத் தேடி மேயர் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பொதுமக்கள் மேயரிடம் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு மேயர் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் 'மக்களை தேடி மேயர் திட்டம்' வருகிற நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிசிவக்கப்பட்டது. அதன்படியே 15 மண்டலங்களிலும் மக்களை தேடி மேயர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோல 1913 அமைப்பு மையம் மூலமாக பொதுமக்களிடம் புகார்கள் பெறப்பட்டு கூட்டமைப்புகளுடன் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 'நம்ம சென்னை செயலி' மூலமாக பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் மூலம் ஆணையர் அலுவலகம், வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களி லும் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் மூலம் ஆணையர் அலுவலகம் வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications