இப்படியும் இருப்பாங்களா? ரோட்டில் ஒரு பொண்ணு நடக்க கூடாதே! விபரீத சைக்கோவை சிக்க வைத்த சிசிடிவி!
சென்னை : சென்னை மடிப்பாக்கம் அருகே சாலையில் நடந்து செல்லும் பெண்களின் உடல் பகுதிகளை கையால் தட்டி சந்தோஷத்தை அனுபவித்த காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர் சிவக்குமாரிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் பெண்ணின் பின்னால் கையில் தட்டிவிட்டு சென்றதாக புகாரில் கூறியிருந்தார்.

சென்னையில் ஷாக்
புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சிவக்குமார் அவரது தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது நடந்து செல்லும் பெண்ணின் பின் பகுதியை கையால் தட்டி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சென்ற நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து புலன்விசாரணை மேற்கொண்டனர்.

இளைஞர் கைது
அதில் சென்னை மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை ராகவா நகர் 11வது பிரதான சாலையை சேர்ந்த 22-வயதான அஜித்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அஜித்குமார் பெயிண்டர் வேலை செய்து வந்ததும், கடந்த 10 நாட்களாக சென்னை மடிப்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் பின் பகுதியை இருசக்கர வாகனத்தில் சென்றவாறு கையால் தட்டிவிட்டு செல்லும் பழக்கத்தில் ஈடுட்டு வந்ததாக கூறியதாக தெரிவித்தனர்.

விபரீத சைக்கோ
வீட்டில் அஜித்குமாருக்கு திருமணம் செய்து வைக்காததால் அந்த விரக்தியில் இணையதளத்தில் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதனால் பெண்களை தொட ஆசைப்பட்டு பெயிண்ட் வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் இதற்கென தனி நேரத்தை ஒதுக்கி வீட்டிலிருந்து அவரது பைக்கை எடுத்துக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு செல்வார் என்பதும் அப்பொழுது பணி முடிந்து சாலையில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் மார்பகத்தையும், பின் பகுதியையும் பைக்கில் சென்றபடி கையால் தட்டி செல்வதால் மகிழ்ச்சியடைவதாகவும் விசாரணையில் கூறியதாக தெரிவித்தனர்.

இதே வேலை தான்
குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இதுபோன்ற பாலியல் தொந்தரவு கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது என பல முகம் சுளிக்கும் தகவல்கள் விசாரணையில் வெளியாகியதாக போலீசார் கூறினர். கைதான அஜித்குமார் கடந்த 2018ம் ஆண்டு சிறாராக இருக்கும்போது மணிகண்டன் என்ற வாலிபரை கொலை செய்துள்ளதாகவும், பழவந்தாங்கல் வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் பெண்களை பின்னால் தட்டி சென்ற வழக்கில் அஜித்குமாரை தேடி வந்த நிலையில் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பெண்கள் நிம்மதி
பின்னர் அஜித்குமார் மீது 354, 4ஆப் உமன் அரஸ்ட்மென்ட் பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் மார்பகத்தையும் பின் பகுதியையும் கையால் தட்டி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பெயிண்டரை சாதுரியமாக கைது செய்த மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசாரை சென்னை காவல் ஆணையர் பாராட்டினார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications