ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தியவர் கைது... மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை : சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்றரை கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் அடையாளம் கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா வியாபாரிகளையும், விநியோகம் செய்யும் நபர்களையும் சுற்றி சுற்றி பிடித்து வருகின்றனர். மேலும், தலைநகர் சென்னையில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து வருவதுடன், அதில் தொடர்புடைய கும்பலை பொறிவைத்து காவல்துறை பிடித்து வருகிறது.
இதனிடையே, சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில், கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாகவும், இதனால் அப்பகுதி உள்ள இளைஞர்களும், சிறுவர்களும் மிகவும் பாதிப்பு அடைந்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலத்தின் அருகில் புழல் காவல் ஆய்வாளர் சோபனா தேவி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் மூன்றரை கிலோ பதுக்கி வைத்து கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சீனிவாசன் என்பதும், இவர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது. இதனையடுத்து சீனிவாசனை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. கஞ்சா மட்டுமின்றி அரசினால் தடை அனைத்துப் போதைப் பொருட்களையும் முற்றிலும் புழக்கத்திலிருந்து ஒழித்து, வருங்கால இளைய தலைமுறையினரை தீய பழக்க வழக்கங்களிலிருந்து காக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications