Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சிலைக்கு காவல் இருந்த இளைஞர் வெட்டிக் கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: விநாயகர் சிலைக்கு காவல் இருந்த இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை செங்கல்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்விரோதத்தால் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Man Hacked To Death In Chengalpattu on the day of Vinayagar Chathurthi

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. எனினும், சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும், இரு வேறு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக, வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன. பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு முழுவதுமே விநாயகர் சதுர்த்தி தினத்தில் பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில், செங்கல்பட்டில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் நிகழ்ந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பாரதபுரம் பகுதியில் பெரிய விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூஜை, புனஸ்காரங்களை செய்து படையல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து, விநாயகர் சிலையை யாரும் சேதப்படுத்திவிட கூடாது என்பதற்காக பாரதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா (25), கார்த்திக், மோகன் ராஜ் ஆகியோர் காவலுக்கு இருந்தனர். நள்ளிரவை தாண்டிவிட்டதால் கார்த்திக், மோகன்ராஜ் சற்று கண் அசந்துவிட்டதாக தெரிகிறது. ராஜேஷ் கண்ணா மட்டும் விநாயகர் சிலை இருக்கும் இடத்தை சுற்றி வந்துள்ளார்.

அப்போது திடீரென அங்கு காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் கண்ணாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. தகராறு முற்றி கைகலப்பாக மாறவே, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ராஜேஷ் கண்ணாவை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

ராஜேஷ் கண்ணாவின் அலறல் சத்தத்தை கேட்ட கார்த்திக்கும், மோகன் ராஜும் அங்கு வந்து பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஷ் கண்ணா உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஊர் மக்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்ததால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் போலீஸார் அங்கு வந்து ஊர் மக்களை சமாதானப்படுத்தி, ராஜேஷ் கண்ணாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க செங்கல்பட்டு சுற்றுப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுப்டடுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+