சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 மாசத்துக்கு லைசன்ஸ் கேன்சல்? எனக்கு கொஞ்ச நேரம் சரியில்லை போல.. புலம்பித் தள்ளிய டிடிஎஃப் வாசன்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிவேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டி கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் தற்போது லடாக் செல்லும் வழியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக மணாலி போலீசாரால் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் என எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வாசன் 2k கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் வெறும் வாசன் என்றால் இவரை பலருக்கும் தெரியாது அதே நேரத்தில் டிடிஎஃப் வாசன் என்றால் சிறு குழந்தைக்கு கூட தெரிந்து விடும்.

தான் நடத்திவரும் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற யூட்யூப் சேனலில் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளில் நீண்ட தூரம் பயணித்து சாகசங்கள் செய்து வீடியோவாக பதிவிட்டதால் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

வான்டடாக போய் வண்டியில் ஏறிய வாசன்.. பாய்ந்தது வழக்குகள்.. எடப்பாடிக்கு ஆதரவாக தர்ணா நடத்தி சிக்கல்வான்டடாக போய் வண்டியில் ஏறிய வாசன்.. பாய்ந்தது வழக்குகள்.. எடப்பாடிக்கு ஆதரவாக தர்ணா நடத்தி சிக்கல்

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

கவாசக்கி நிஞ்சா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல சூப்பர் பைக்குகளில் நீண்ட தூரம் பயணம் செய்து ஹெல்மெட்டில் கேமராவை வைத்து அதனை வீடியோவாக செய்து தனது யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் பல்க்காக ஒரு அமௌன்ட் அவருக்கு கிடைக்கும் நிலையில் தற்போது கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிக்பாஸ் டிக் டாக் பிரபலமான ஜிபி முத்துவை வாகனத்தில் அமர வைத்து அதிவேகத்தில் இயக்கியதாக புகார் எழுந்தது.

சிக்கிய சிறுத்தை

சிக்கிய சிறுத்தை

இதை அடுத்து அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது, பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோவை போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர். தொடர்ந்து தன்னை பற்றி ஊடகங்கள் தவறாக செய்தி பரப்புவதாகவும் இனிமேல் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் என டிடிஎஃப் கூறியிருந்தார்.

லடாக் பயணம்

லடாக் பயணம்

அதன் பிறகு அமைதியாக இருந்த அவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல இரு வாரங்களாக வீட்டில் அமைதியாக இருந்த டிடிஎப் ஹாசன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு லடாக் கிளம்பி இருக்கிறார். செல்லும் வழியில் மணலி பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக உள்ளூர் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். அதிநவீன கேமரா மூலம் கண்காணித்தபோது சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட டிடிஎஃப் அதிக வேகத்தில் பயணித்திருக்கிறார்.

 லைசன்ஸ் கேன்சல்?

லைசன்ஸ் கேன்சல்?

இதை அடுத்து அவரை மறித்த போலீசார் அவரது லைசன்ஸ் மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி இருக்கின்றனர். இதை எடுத்து ஒரு வழியாக அவரிடம் கெஞ்சி கூத்தாடி இனிமேல் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் என கூறியதை எடுத்து பைன் மட்டும் விதித்து அனுப்பி வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக அந்த வீடியோவில் பேசியுள்ள டிடிஎஃப் வாசன் எனக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை போல இனிமேல் போலீஸ் கேஸ் வாங்க கூடாது இனிமேல் வாகனம் வேகமாக ஓட்ட மாட்டேன் என புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

English summary
Popular YouTuber TTF Vasan, who was arrested by the Coimbatore police for speeding two-wheeler and released on bail, is now going viral on social media in which the Manali police warned him that his license would be canceled for speeding on his way to Ladakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X