ரியல் பைசன் மணத்தி கணேசனை புடம் போட்ட பி.டி வாத்தியார் இவர்தான்.. நெகிழ்ந்த மாரி செல்வராஜ்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கி துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ரியல் பைசனான கபடி வீரர் மணத்தி கணேசனின் உடற்கல்வி ஆசிரியரை சந்தித்து நெகிழ்ச்சியோடு மரியாதை செலுத்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
தீபாவளி விருந்தாக மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பைசன்' திரைப்படம் தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மணத்தி கிராமத்தில் பிறந்து கபடியில் தேசமே கொண்டாடிய வீரராக சாதித்தவர் கணேசன்.

தமிழகத்தின் மூலையில் ஒருய் சிற்றூரில் பிறந்த மணத்தி கணேசன், இந்தியா முழுவதும் பெயர் பெற்ற கபடி வீரராக உயர்ந்தார். அவரது வாழ்க்கைப் பயணம் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், தளராத மனவலிமையும் கொண்டது. அவரது வாழ்வே, சாதிக்கத் துடிப்பவர்களுக்கு அற்புதமான ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்த கணேசன், பள்ளியில் ஹாக்கி வீரராக இருந்துள்ளார். பள்ளிக்காலத்தில் நண்பர்களுடன் விளையாடிய கபடி பின்னாளில் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றிய ஒரு விளையாட்டாக கபடி மாறியது.
அவரது திறமையை முதலில் கண்டறிந்தவர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ். அவரை கபடியில் வளர்த்து எடுத்தார் அவர். பின்னர் மாவட்ட விளையாட்டு பயிற்சியாளர் உறுதுணையுடன் மாநில அளவிலான போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினார் கணேசன். பின்னர் தேசிய அணிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அவர் Asian Games, Pro Kabaddi League உள்ளிட்ட பல முக்கிய போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி சிறந்த சாதனைகள் படைத்தார். இந்திய அரசால் மணத்தி கணேசனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
மணத்தி கணேசன் இன்று இந்திய விளையாட்டுத் துறையில் ஒரு முன்னுதாரணமான கபடி வீரராக மட்டுமல்லாமல், இளம் தலைமுறைக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். மாரி செல்வராஜ் இயக்கிய 'பைசன்' படத்தின் மூலம் கணேசனின் போராட்ட வாழ்க்கை திரையில் வெளிச்சம் பெற்றுள்ளது. சாதிய அரசியலோடு, ரத்தமும் சதையுமான விளையாட்டுப் படமாகி இருக்கிறது பைசன்.

இந்நிலையில், ரியல் பைசனான கபடி வீரர் மணத்தி கணேசனின் உடற்கல்வி ஆசிரியரை சந்தித்து நெகிழ்ச்சியோடு மரியாதை செலுத்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். மணத்தி கணேசனை கபடியில் புடம் போட்ட சாயர்புரம் போப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜை, மணத்தி கணேசனுடன் சென்று சந்தித்துள்ளார் மாரி செல்வராஜ்.
இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், "அண்ணன் மனத்தி கணேசன் அவர்களின் பெருங்கனவுக்கு முதல் ஒளி ஏற்றிய பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் தங்கராஜ் சார் (சந்தனராஜ்) அவர்களை சந்தித்து என் மரியாதையையும் பெரு நன்றியையும் சமர்ப்பித்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications