சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அராஜகம்! சொற்ப பாக்கியை காரணம் காட்டி நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? கொந்தளித்த கே.பாலகிருஷ்ணன்!

Google Oneindia Tamil News

சென்னை : மின்சாரம் வாங்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Recommended Video

    தமிழ்நாட்டிற்கு மின்சாரம் இல்லை மத்திய அரசின் புதிய விதியால் சிக்கல்

    இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    சந்தையில் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை.. மின்தட்டுப்பாடு பற்றி தமிழக அரசை எச்சரிக்கும் ராமதாஸ்! சந்தையில் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை.. மின்தட்டுப்பாடு பற்றி தமிழக அரசை எச்சரிக்கும் ராமதாஸ்!

    மின்சார கொள்கை

    மின்சார கொள்கை

    மின்சாரம், மக்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக உள்ளது. அன்றாட வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்பிற்கும் மின்சாரமே அடிப்படையாகும். அனைவருக்கும் தடையற்ற மின்சாரத்தை, நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் கடமையை மாநில அரசுகளே ஏற்றுள்ளன. அதே சமயத்தில் ஒன்றிய அரசாங்கம், தனியார் பெருமுதலாளிகளின் லாபத்தை மனதில் கொண்டு, மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது. தனது போக்கிற்கு மாநில அரசுகளையும், மின்வாரியத்தையும் நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஏற்படும் சுமை அனைத்தும் சாமானிய மக்களின் தலையிலேயே விடிகிறது.

     ஒன்றிய அரசாங்கம்

    ஒன்றிய அரசாங்கம்

    ஏற்கனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசாங்கம் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக நுகர்வோருக்கு கடுமையான கட்டணச் சுமை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின் விநியோகத்திலும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் புகுத்தப்படுகின்றன. மோடி அரசின் இந்த போக்கை முன் உணர்ந்துதான் மின்சார திருத்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ரூ. 926 கோடி

    ரூ. 926 கோடி

    தமிழ்நாடு பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படும் ரூ. 926 கோடியோ, ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் பாக்கி வைத்திருக்கும் ரூ. 5085 கோடிகள் என்பதோ ஒன்றிய அரசால் அனுமதிக்க முடியாத தொகை அல்ல. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நடத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளிகள் ரூ.2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கி வைத்துள்ளார்கள். அவர்கள் அந்த தொகையை செலுத்திட ஆண்டுக்கணக்கில் அவகாசம் கொடுக்கும் மோடி அரசுதான் - 12 மாநிலங்களில் வாழும் 64 கோடி மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளுவோம் என்று மிரட்டுகிறது.

    தனியார் பெருமுதலாளிகள்

    தனியார் பெருமுதலாளிகள்

    தனியார் பெருமுதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகளை வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் பட்டியலைக் கூட வெளியிட அரசு தயங்குகிறது. இதனோடு ஒப்பிட்டால் மாநிலங்களின் பாக்கித் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் கூட அதனை காரணமாக்கி, பட்டியல் வெளியிட்டு, தனது கொள்கைகளை அமலாக்க நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன?. பெருமுதலாளிகளுக்கு வெண்ணையும், சாமானிய மக்களுக்கு சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது.

    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    சாமானிய மக்களின் மீதும், சிறு குறுந் தொழில்களின் மீது மின்வெட்டை சுமத்தும் கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கண்டிக்கிறது. உடனடியாக தனது கொள்கையை திரும்பப் பெற்று அனைத்து மக்களுக்கும் தடையில்லாத மின்சாரத்தை நியாயமான கட்டணத்தில் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்." என கூறப்பட்டுள்ளது.

    English summary
    While the central government has ordered that states including Tamil Nadu have been banned from buying electricity, the Marxist Communist Party has insisted that the Modi government should ensure uninterrupted power supply ; மின்சாரம் வாங்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மோடி அரசு தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X