சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலெக்டர்களுக்கு பறந்து வந்த உத்தரவு.. தமிழக அரசு அதிரடி.. சட்டசபையில் அன்றே சொன்னாரே ஸ்டாலின்.. செம

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசியலில் கிராம சபை கூட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்து வருகின்றன.. இடைப்பட்ட காலத்தில் காணாமல் புதைந்துபோன இந்த கிராம சபை கூட்டங்களை, மீண்டும் மக்களிடம் கொண்டு சென்ற பெருமை மநீம தலைவர் கமல்ஹாசனையே சாரும்.

இதற்கு பிறகு திமுகவும், பாமகவும், கிராம சபை கூட்டங்களை அதிகமாக நடத்தின.. தேர்தல் சமயங்களில் மக்களை அதிகமாகவே இதன்மூலம் நெருங்கின.

மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

 பாமக, திமுக

பாமக, திமுக

இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படும், எழுப்பப்படும் பல்வேறு விவகாரங்கள், அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகின்றன... இதனிடையே, அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முதல்கட்டமாக இந்த ஆண்டு 600 ஊராட்சிகளில் "கிராம செயலகங்கள்" கட்டப்படும் என்றும் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும், அதிலும் நவம்பவர் 1-ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்..

ஒன்றியங்கள்

ஒன்றியங்கள்

அதாவது, ஜனவரி 26, மே 1 , ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ,மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும்... அத்துடன் 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும், சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் பரிசுத் தொகையுடன் வருடந்தோறும் "உத்தமர் காந்தி" விருது, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்காக உயர்த்தித்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

கலெக்டர்கள்

கலெக்டர்கள்

அதன்படியே அதற்கான அரசாணைகளும் அதிரடியாக வெளியிடப்பட்டன.. இந்நிலையில், இன்னொரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.. அதன்படி, சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது... 75-ம் ஆண்டு சுதந்திர தினம், நாடு முழுவதும் இந்த முறை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

 சுழற்சி முறை

சுழற்சி முறை

சுதந்திர தினமான 15.08.2022 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினமான 15.08.2022 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். பார்வை 2-ம் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

 கிராம சபை

கிராம சபை

தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது..

English summary
mass announcement by tn gov and permission to hold Gram Sabha meetings on Independence Day சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X