Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-from-june-8-to-14th

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் சிம்ம வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.

அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அன்னதானம் அளிப்பது நன்மையைத் தரும். தொழிலில் தேவையில்லாத மன வருத்தம் ஏற்படும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நன்மை.

கவனம்

செவ்வாய் 9 ஆம் இடத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் கண்டிப்பாக சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். துணை விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவது நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பிள்ளைகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சாதிக்கும் யோகம்

மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். பெற்றோர், பெரியோர் விஷயங்களில் ஏற்றம் காணப்படும். பாக்கியத்தில் செவ்வாய் பலமாக இருப்பதால் எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். எந்த விஷயத்தை தொடங்கினாலும் ஏற்றம் உண்டாகும். ஏராளமான நல்ல காரியங்கள் நடக்கும். அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் அழுத்தம் அதிகளவில் ஏற்படும்.

இதை பண்ணிடாதீங்க

தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். தொழிலில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் செயல்படுகளால் சிரமத்திற்குள்ளாகும் சூழல் ஏற்படும். லாபத்தில் புதன் அமர்ந்திருப்பது நிறைய வெற்றியைக் கொடுக்கும். இஎம்ஐ சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குழப்பங்கள் தீரும். ஹயக்ரீவர் வழிபாடு நிம்மதியைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+