சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஒன்லி லீடர்" ஸ்டாலின்... தேசிய லெவலில் எகிறும் மாஸ் "புள்ளி".. திணறிப்போகும் பாஜக.. லட்சுமி ஒரே போடு

தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் வலிமை படைத்த தலைவராக உள்ளதாக லட்சுமி கூறுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவை எதிர்க்கக்கூடிய மிகப்பெரிய வலிமை வாய்ந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.

மற்றொருபக்கம், காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற சலசலப்பும் ஓடிக் கொண்டிருக்கிறது.. இதனிடையே, பாஜகவுடன் அதிமுகவுக்கான கூட்டணி எப்படி இருக்கும் என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக+பாமக=மெகா கூட்டணி! வடக்கு மேற்கில் எடப்பாடியின் புதுக்கணக்கு! ’சவுத்’தில் காத்திருக்கும் சவால்?பாஜக+பாமக=மெகா கூட்டணி! வடக்கு மேற்கில் எடப்பாடியின் புதுக்கணக்கு! ’சவுத்’தில் காத்திருக்கும் சவால்?

 சலசலப்பு

சலசலப்பு

நம் ஒன் இந்தியா தமிழுக்காக சிறப்பு பேட்டி ஒன்றையும் அவர் தந்துள்ளார். நாம் முன்வைத்த கேள்விகளுக்கு லட்சுமி தந்த பதில்தான் இது: "பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்டுவதற்கு முன்பு, காங்கிரஸடன் அதாவது ராகுலுடன் போனிலல் பேசியதாகவும், அக்கட்சியுடன் நெருங்கி வருவதாகவும் கூட செய்திகள் வந்தன.. அந்தவகையில், தன்னுடைய கூட்டணியை காங்கிரஸ் பக்கம் திருப்பினால், பாஜக பலமாக அடிவாங்கும்.. அல்லது பாஜகவை உள்ளடக்கிய கூட்டணி என்றால், அது நிச்சயம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பினை குறைக்கவே செய்யும்..

கதர்கள்

கதர்கள்

அதேசமயம், திமுகவை விட்டுவிட்டு வெளியே போக வேண்டிய தேவை காங்கிரசுக்கு இல்லை.. அதேபோல, திமுகவுக்கும் காங்கிரசுக்கு தேவை.. ஆனால், கடந்த தேர்தலில் தந்ததுபோல் இந்த முறை 10 சீட்களை, காங்கிரசுக்கு திமுக தருமா என்பது சந்தேகம்தான்.. கண்டிப்பாக இந்த முறை குறைத்தே தரக்கூடும் என தெரிகிறது.. காங்கிரசுக்கும் வேறு வழியில் இல்லை.. இன்னைக்கு திமுக இல்லையென்றால், தேசிய அளவில் பாஜக எதிர்ப்பை பேசக்கூடிய வேறு எந்த கட்சிகளும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.. கேசிஆர், மமதா போன்றோர் பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்றாலும், மம்தாவின் குரல் இப்போதே குறைந்துவிட்டது..

 கம்மும் குரல்

கம்மும் குரல்

தேர்தல் முடிந்ததும் கேசிஆர் எப்படி பேச போகிறாரோ, அவரது நிலைப்பாடு எது என்று தெரியவில்லை.. மகாராஷ்டிராவில் ஒலித்து கொண்டிருந்த எதிர்ப்பு குரல், இப்போது குறைந்துவிட்டது.. உத்தவ் தாக்கரே, சரத்பவாரின் குரல்களும் கம்மிவிட்டன.. இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.. இவைகளை எல்லாம் ஒன்றிணைத்து சேர்ந்து பார்க்கும்போது, திமுக மட்டுமே பாஜகவை எதிர்க்கும் வலிமையான கட்சியாக இன்றைக்கு உள்ளது.. திமுகவால் மட்டுமே பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க முடியும்..

 விபி சிங்

விபி சிங்

ஸ்டாலினால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும்.. ஒருவேளை, 2024-ல் பாஜகவுக்கான வாய்ப்பு குறையும்போது, ஐகே குஜ்ரால் அரசு போன்றோ, அல்லது விபி சிங் அரசு போன்றோ, கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால், அதற்காக அனைவரையும் இணைக்கக்கூடிய முக்கிய புள்ளியாக ஸ்டாலினால் மட்டுமே செயல்பட முடியும்.. இதை பலரும் ஒப்புக் கொள்கிறார்கள்.. ஆனால், இதுவரை அப்படி வெளிப்படையாக இயங்க தோன்றவில்லை.. காங்கிரசுக்கு திமுக இல்லாமல், தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.. சில தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகள் காங்கிரசுக்கு இருக்கலாம்... விளாங்கோடு போன்ற தொகுதிகளில் இது இன்னும் அதிகமாக இருக்கலாம்.. ஆனால், திமுக இல்லாமல் களத்தில் சாத்தியமாகாது.. திமுகவுக்கும் காங்கிரஸ் தேவையாக இருக்கிறது" என்றார் லட்சுமி.

English summary
Mass Leader MK Stalin and Can DMK form an alliance without Congress, says Sr Journalist Lakshmi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X