Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முக்கோண ரிசல்ட்".. ஹிட் காங்.. குஜராத்தில் வென்ற "மோடி மாயம்".. டெல்லி, ஹிமாச்சலில் வழுக்கியது ஏன்?

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்திக்க என்னென்ன காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிமாச்சல பிரதேச மாநில மக்களின், கனத்த நம்பிக்கையை, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது.. அம்மக்களுக்கான நன்றியுணர்வையும் செலுத்த கடமைப்பட்டுள்ளது.. பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிக்கொடியை நாட்டியது, பாஜக மீதான அவநம்பிக்கையையும் பறைசாட்டுவதாகவே அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.. ஆனால், ஆட்சியை பிடிக்க பாஜக குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று காங்கிரஸ் கட்சிக்கு சந்தேகமும் எழுந்துள்ளதால், தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவி விடாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது..

5 வருடத்துக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை சந்தித்து வரும் மாநிலங்களில் ஒன்றுதான் ஹிமாச்சல பிரதேசம்.. அதேசமயம், பல காலமாகவே, காங்கிரஸ் மாநிலமாக அறியப்பட்டதும்கூட.

களப்போட்டி

களப்போட்டி

அதனால்தான், இந்த தேர்தலில், பாஜக Vs காங்கிரஸ் என்ற களப்போட்டி துவக்கத்திலேயே துவங்கியது.. காங்கிரஸ் என்பதை மாற்ற, பாஜக நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது.. பாஜக தலைவர் ஜேபி நட்டா, இந்த ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்தான்.. அதனாலேயே அவரது களப்பணி என்பது மிக மிக தீவிரமாக இருந்தது.. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜனவரியில் நிறைவு பெற போகிறது.. இருந்தாலும் அவரது பதவி மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நட்டா விழுந்து விழுந்து களத்தில் வேலை பார்த்தது, மாநில மக்களின் கவனத்தை பெற்றது என்றே சொல்லலாம்.

புது முகங்கள்

புது முகங்கள்

பாஜகவை பொறுத்தவரை, ஒரு நபரை பார்த்துதான் தேர்தலில் சீட் வழங்கும்.. ஆனால், இந்த தேர்தலில் 11 எம்எல்ஏக்களுக்கு பாஜக சான்ஸ் தரவில்லை.. மாறாக, 21 புதுமுகங்களுக்கு வாய்ப்பு தந்தது.. இது பாஜக முன்னெடுத்த மிக முக்கிய வியூகம் ஆகும்.. கிட்டத்தட்ட ரிஸ்க் எடுத்தது என்றே சொல்லலாம். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்ட 5 எம்எல்ஏக்கள் சுயேச்சையாக போட்டிபோடுவார்கள் என்று பாஜக கனவிலும் நினைக்கவில்லை.. அவர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதை தடுக்க, நட்டா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.. கடைசியில் அந்த 5 பேரையும் கட்சியை விட்டே நீக்கிவிட்டது. அந்தவகையில் இதுவும் பாஜகவுக்கு ஒரு சறுக்கல்தான்.

 எகிறி அடித்தது

எகிறி அடித்தது

வழக்கமாக மத்திய பாஜகவின் குறைகளை காங்கிரஸ் தன்னுடைய பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொள்வது இயல்புதான்.. ஆனால், ஹிமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை, பாஜகவின் முறைகேடுகளை காங்கிரஸ் பிரச்சாரத்தில் முன்னெடுத்தது.. ஊழல் முறைகேடுகள் என்ற குற்றச்சாட்டை பாஜக, பிற கட்சிகளின் மீது திணிப்பது வழக்கமான பாணி என்றாலும், பாஜக மீதே முறைகேடுகளை காங்கிரஸ் பறைசாற்றி வந்தது, பாஜகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்தது.. அதையும் தாண்டி, தேர்தல் அறிக்கையில், காவலர் தேர்வில் 250 கோடி வரை முறைகேடு என்பதை குறிப்பிட்டு, பாஜகவை மேலும் டேமேஜ் செய்தது காங்கிரஸ்.. மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் தொடர்பு இல்லாமல், இது நடந்திருக்கவே முடியாது என்றும் பிரச்சாரத்தில் எகிறி அடித்தது காங்கிரஸ். இதுவும் பாஜகவின் ஒரு சறுக்கல்தான்.

சறுக்கிய லீடர்

சறுக்கிய லீடர்

இத்தனைக்கும் காங்கிரஸின் வழக்கமான கோஷ்டி பூசல் இந்த மாநிலத்திலும் இருக்கவே செய்தது.. குறிப்பாக, முகேஷ் அன்கிஹோத்ரி கௌல் சிங் தாக்கூர், சுக்வந்தர் சுகு, ஆஷா குர் போன்ற சீனியர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தியதாக சொல்லப்பட்டது என்றாலும், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் காங்கிரஸுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்து வந்ததையும் மறுக்க முடியாது.

நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றும், இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும், அரசு ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கப்படும், மாநிலத்தில் மேலும் 5 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும், என்றெல்லாம் இலவச வெளியீடுகள் வெளியானது, அந்த கட்சிக்கே கடுமையான விமர்சனத்தை பெற்று தந்தது.. சுப்ரீம்கோர்ட்டில் மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா சார்பில் இலவசங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துவிட்டு, மற்றொருபுறம் இப்படியெல்லாம் இலவசங்களை அறிவித்தது, பாஜக மீதான நம்பகத்தன்மையையும், உறுதிப்பாட்டையும் குலைப்பதாகவே அமைந்துவிட்டது. பாஜகவின் சறுக்கலுக்கு இதுவும் ஒரு காரணம்.

மேஜிக்

மேஜிக்

குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் மோடிதான் முக்கிய நாயகனாக முன்னிறுத்தப்பட்டார். அங்குள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரிதுபடுத்தப்படவில்லை, பலருக்கு சீட்டே தரப்படவில்லை. நிறைய அதிருப்தி வேட்பாளர்களும் நின்றனர். பாஜகவில் குழப்ப நிலையே நீடித்தது. ஆனாலும் மோடி - அமித்ஷா இணை அசரவில்லை. 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் மோடி பேசினார். தீவிரப் பிரசாரம் செய்தார். தரைலோக்கலாக இறங்கி அடித்தார்.. அவரது அதிரடியான பிரசாரமே இன்று குஜராத்தில் மீண்டும் பாஜகவை வெற்றி பெற வைத்துள்ளது. இதன் மூலம் மோடி மேஜிக் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை பாஜக குஜராத்தில் நிரூபித்துள்ளது.
அபிலாஷைகள்

அபிலாஷைகள்

ஆனால் இந்த மேஜிக் ஹிமாச்சலில் செல்லவில்லை, சமீபத்தில் நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பலிக்கவில்லை. இரண்டு இடங்களிலும் பாஜக வெல்லவில்லை. பெரும்பான்மை பலத்தையும் பெற முடியவில்லை. இது ஏன்? ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக அரசு கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.. அரசு நிர்வாகம் சரியாக இல்லை. மக்களின் அபிலாஷைகளை அது பூர்த்தி செய்யவில்லை. பணவீக்க உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, மோசமான சாலைகள், ஓய்வூதியப் பிரச்சினை என பல பிரச்சினைகளை பாஜக அரசு அங்கு சம்பாதித்து வைத்திருந்தது.

மெசேஜ்

மெசேஜ்

முதல்வர் மீதான அதிருப்தியும் அதிகம். இதுவே அக்கட்சிக்கு அங்கு பாதகமாகி விட்டது. அதேசமயம், இமாச்சல் மக்கள் மாற்று கட்சியாக ஆம் ஆத்மியைப் பார்க்கவில்லை. மாறாக பாரம்பரியமான காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர். இது பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்ற எதார்த்தத்தை நிரூபிப்பதாக உள்ளது. இதை புரிந்து கொண்டு காங்கிரஸ் கட்சி இமாச்சலில் சிறந்த ஆட்சியைக் கொடுக்குமானால் அது இந்தியா முழுமைக்கும் சரியான மெசேஜை கொண்டு சேர்க்கும். பாஜகவுக்கும் அது பெரும் சரிவைக் கொடுக்க உதவும்... இதேபோலத்தான் டெல்லியிலும். கடந்த 15 வருடமாக 3 டெல்லி மாநகராட்சிகளை கையில் வைத்திருந்தும், துப்புரவு, குடிநீர் என அனைத்திலும் பாஜக மக்களுக்கான செயல்பாடுகளை முறையாக செய்யவில்லை. மோசமான நிர்வாகமும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது. இதனால்தான் மொத்தமாக தூக்கி ஆம் ஆத்மி கையில் கொடுத்து விட்டனர்.

சுதாரிப்பு

சுதாரிப்பு

குஜராத் கதையே வேறு.. அங்கு மக்களிடையே அதிருப்தி இருக்கிறதா என்பதை விட அவர்கள் மோடியைக் கைவிடத் தயாராக இல்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது. அதேசமயம், குஜராத்தைத் தாண்டி இரண்டு முக்கிய தேர்தலில் பாஜக சரி்ந்துள்ளது நிச்சயம் அக்கட்சிக்கு அபாய ஒலியாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. பாஜக சுதாரித்தாக வேண்டிய நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை மோடி, குஜராத்தில் பிரசாரம் செய்யாமல் போயிருந்தால் ரிசல்ட் வேறு மாதிரியாகக் கூட வந்திருக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் நம்மால் நிராகரிக்க முடியாது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+