முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மல்லை சத்யா.. கையோடு ஒரு மனு.. கூடவே "சபாஷ்"
சென்னை :சென்னை தலைமச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு மல்லை சத்யா இதனை தெரிவித்தார்.
Recommended Video
மேலும் சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மனு அளித்ததாகவும் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலகப் பிரசித்த பெற்ற மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு பல்லவர் கால சிற்பங்களான வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட சிற்பங்களை காண வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கே சுற்றுலா பயணிகளை கவரவும், உற்சாகப்படுத்தவும் மத்திய, மாநில சுற்றுலாத் துறைகள் சார்பில் 1992-ம் ஆண்டு முதல் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நாட்டிய விழா நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு கருதி இந்த விழாக்கள் நடத்தப்படவில்லை.

மாமல்லபுரத்தில் நாட்டிய விழா
இந்நிலையில், மாமல்லபுரத்தில் மீண்டும் நாட்டிய விழா நடத்தும் பொருட்டு அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர், சுற்றுலாத்துறை இயக்குனர், செங்கல்பட்டு ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். மேலும் நாட்டிய விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

மல்லை சத்யா மனு
இதற்கிடையே கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாகவும் மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மல்லை சத்யாவுடன் மதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, மல்லை தமிழ் சங்கத்தின் செயலாளர் பாஸ்கர் ஆகியோரும் சென்றனர்.

மல்லை சத்யா பாராட்டு
முதலமைச்சரிடம் மனு மளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, "உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு கோரிக்கை வைத்தோம். எங்களின் மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் விரைவில் பரிசீலிப்பதாக கூறினார். முதலமைச்சர் சந்திப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்பாடு செய்து தந்தார். கொரோனா பேரிடர் காலமான இந்த அசாதாரண சூழ்நிலையிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சிபுரிந்து வருகிறார். மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதே சமயம் முப்படைத் தளபதி மரணம் தொடர்பாக அவதூறாக பேசி, தேசிய ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பதிவு செய்பவர்களை காவல்துறை தண்டிக்க வேண்டும் எனவும் மல்லை சத்யா வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications