நாட்டுக்காக பதக்கம் வென்றவர்கள் தெருவில்! தேசப்பற்றை பற்றி பேச பாஜகவுக்கு அருகதையில்லை -துரை வைகோ
சென்னை: நாட்டுக்காக பதக்கம் வென்ற வீராங்கனைகள் நீதி கேட்டு தெருவில் போராடும் நிலையில், தேசப்பற்றை பற்றி பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் இல்லை என மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் சூழலில், அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான தனது வேதனையை துரை வைகோ பகிர்ந்திருப்பதாவது;

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.
'பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டக் களத்தை விட்டு வெளியேற மாட்டோம்' என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், சில சக்திகள் அரசியல்வாதிகளின் பின்பலத்தோடு போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்று வருகின்றனர்.
காவல்துறையின் கொடுரத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாங்கள் சர்வதேச, இந்தியப் போட்டிகளில் பெற்ற பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறப்பு சலுகைகளையும் திருப்பித்தரப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்த்ரா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பிரபல நடிகர் சோனு சூட் போன்றவர்கள் அநீதிக்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் சாக்ஷி மாலிக். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் பஜ்ரங் புனியா.
சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று புகழ் ஈட்டித் தந்தவர்களே அநீதிகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலையுள்ளது பா.ஜ.க. ஆளும் ஆட்சியில்.
சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த இவர்கள் ரத்ததை வியர்வையாக சிந்தி நாட்டுக்காகப் போராடி பதங்கங்களை வென்றவர்கள்.
இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற இயலாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தேசப்பற்றை போதிக்கின்ற பா.ஐ.க. மதவாத சக்திகள் அதற்கு முரணாக செயல்படுகின்றனர். எனவே தேசப்பற்றைப் பற்றி பேசுவதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள்.
முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்ட நியாயங்களை மற்ற மாநில முதல்வர்களுக்கும் எடுத்துக் கூறி தேசிய அளவில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.












Click it and Unblock the Notifications