வரலாற்றில் முதல்முறை.. 41 வயசில் இருந்து 24-க்கு திரும்பிய டாக்டர்.. 3 சீக்ரெட் இதுதான்! ஒரே வியப்பு
சென்னை: டாக்டர் ஒருவருக்கு 41 வயதாகிறது.. ஆனால், 25தான் ஆகிறது? எப்படி? அதிக மணிநேரம் ஜிம்மில் செலவிடாமல், கடுமையான உணவுமுறையைப் பின்பற்றாமல், இப்படி திடீரென டிரிவர்ட்ஸ் கியர் போட்டு, 2K கிட்ஸ்களுக்கே டஃப் தந்துள்ளார் இந்த டாக்டர்.. இதை பற்றிதான் ஊரே பேசிக் கொண்டிருக்கிறது.. அப்படியென்ன செய்தார் இந்த டாக்டர்? அதைபற்றித்தான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.
அந்த டாக்டர் பெயர் முகமது எனாயத்.. ஹம் டூ யன் என்கிற கிளினிக் வைத்து நடத்தி கொண்டிருக்கிறார். இவருக்குதான் இப்போது 41 வயதாகிறது.. ஆனால், 24 வயதுக்குரிய இளைஞரின் , அத்தனை உடல்ரீதியான அம்சங்களும் தனக்கு இருப்பதாக சொல்கிறார்.. இது எப்படி சாத்தியமானது என்பதை முகமது தெளிவாக விளக்குகிறார்.

இது எப்படி சாத்தியமானது
அதாவது, வழக்கமான உணவுகளுடன் சேர்த்து 3 வகையான சப்ளிமெண்ட்டுகளை தான் பயன்படுத்தியதாக சொல்கிறார்.. ஒன்று, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரண்டாவது, மக்னீசியம், மூன்றாவது, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை சாப்பிட்டதாக கூறுகிறார் முகமது எனாயத்.
உணவுடன் சேர்த்து இந்த 3 சப்ளிமெண்ட்டைகளையும் சாப்பிடுவதால், உடலில் இளமை திரும்பி, 24 வயது தோற்றத்துக்கு வந்துவிட்டதாகவும், தோற்றம் மட்டுமல்லாமல், 24 வயதுக்குரிய உடல் அம்சங்களுடன் தான் இருப்பதாகவும் சொல்கிறார் முகமது எனாயத்.
வைட்டமின் B காம்ப்ளக்ஸ்
வைட்டமின் B காம்ப்ளக்ஸ் சாப்பிடுவதால் என்பது, உடலினுடைய மெட்டபாலிசத்தை சீராக்குகிறது.. உடலிலுள்ள செல்கள் ஆரோக்கியமாக உள்ளதை உறுதிப்படுத்துகிறது.. நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்துகிறது.. இந்த வைட்டமின் B, முதல் B12 வரை நிறைய உள்ளது..
மனித உடலுக்கு தேவையான செல்களை புதுப்பிக்கவும், மெட்டபாலிசத்தை சரியாக வைத்து கொள்ளவும், வயதாகக்கூடிய காரணிகளை குறைப்பதில், திசுக்களை சரியாக வைத்து கொளவதில் வைட்டமின் B காம்பளக்ஸ்களுக்கு நிறைய பங்கு உள்ளது..
மீன்கள், முட்டை, கோழி, விதைகள், பால் பொருட்கள், கீரைகளில் வைட்டமின் B நிறைய உள்ளது..
மக்னீசியம் சத்துக்கள் அவசியம்
அதேபோல மக்னீசியம் சத்துக்களை எடுத்துக் கொண்டால், அது மினரல்களின் மாஸ்டர் எனலாம்.. தாதுக்களிலேயே பெரிய தாது, இந்த மக்னீசியம்தான்.. நம்முடைய உடலில் இந்த மக்னீசியம் சத்துக்கள் அதிகமாக தேவைப்படுகிறது.. மக்னீசியம் அளவு சரியான அளவில் இருந்தால், உடலும் சீராக இருக்கும்.
எலும்பு ஆரோக்கியத்துக்கும்,ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கும், தசை செயல்பாட்டிற்கும் மெக்னீசியம் சத்துக்கள் அவசியமானவை.. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் மக்னீசியம் சத்துக்கள் தேவைப்படுகிறது.. நரம்புகள் செயல்பாடுகளை முறைப்படுத்துகிறது.. தோல் பராமரிப்பை உறுதி செய்கிறது.. பருப்பு வகைகள் மற்றும் இலைகள் போன்ற உணவுகளில் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
ஒமேகா 3 சத்துக்கள்
ஒமேகா-3 நமக்கு அத்தியாவசியமான சத்தாகும். இந்த நல்ல கொழுப்பு சத்தானது, இதய ஆரோக்கியத்தை காக்கக்கூடியதாகும்.. வீக்கத்தை குறைக்கக்கூடியதாகும்.. மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக்கூடியதாகும்.
ஒமேகா3 கொழுப்பு அதிக அளவில் மீன்களில் நிறைந்துள்ளது.. மீன்களை வாரந்தோறும் மீன்களை சாப்பிடுவது இருதய நோயிலிருந்து பாதுகாப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் மீன், வால்நட்ஸ் மற்றும் சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்புகள் செரிந்து காணப்படுகிறது.
3 சீக்ரெட் உணவு
இந்த 3 சப்ளிமெண்ட்களைதான் டாக்டர் முகமது எனாயத் தன்னுடைய இளமையின் சீக்ரெட்டாக விளக்கியிருக்கிறார். இந்த செய்திதான் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஆனால், எவ்வளவுதான் நன்மைகளை தந்தாலும், சத்துக்களை கொண்டிருந்தாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெறாமல் யாருமே இவைகளை சாப்பிடக்கூடாது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications