குரங்கு காய்ச்சல்.. கியரை மாற்றிய தமிழக அரசு.. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!
சென்னை : உலகில் அளவில் அதிகரித்து வரும் நிலையில், குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து தங்கள் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
Recommended Video
1958 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இவ்வகை வைரஸுக்கு விஞ்ஞானிகள் குரங்கு பாக்ஸ் என பெயரிட்டனர். பின்னர் இது குரங்கு காய்ச்சல் என மாறியது.

குரங்கு காய்ச்சல் அச்சம்
1970-ஆம் ஆண்டில் தான் மனிதனுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென இவ்வகை வைரஸ் பாதிப்பு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவ தொடங்கி பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு தென்பட்டு உள்ளது. இதைத் தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவிலும், இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

மருத்துவத்துறை எச்சரிக்கை
இந்நிலையில் தங்கள் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். குரங்கு அம்மை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில்: "இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தி உயர்தர சிகிச்சை
அதேபோல், அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவிடன் நாடுகளில் இருந்து கடந்த 21 நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த பயணிகளில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி உள்ளவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், தனிமைப்படுத்தி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

புனேவில் ஆய்வு
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி மற்றும் கொப்புளங்களின் மாதிரிகளை உடனடியாக புனேவில் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும், அந்த ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால், கடந்த 21 நாட்களுக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும், மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை உரிய கவனத்துடன் பின்பற்றி தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்" எனவும் அந்த கடிதத்தில் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications