மீனா கணவர் எப்போதும் சிரித்த முகம்.. கன்னத்தில் குழி.. இனி எப்போது பார்ப்போம்.. குமுறும் மக்கள்!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் எப்போதும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார். மீனாவும் போகும் போதும் வரும் போதும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என அப்பகுதியில் உள்ளவர்கள் கலக்கத்துடன் கூறுகிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் நடிகை மீனா. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு நைனிகா எனும் மகள் பிறந்தார்.

நைனிகா
நைனிகாவும் பார்ப்பதற்கு அப்படியே மீனாவை உரித்து வைத்திருப்பார். இவரும் நடிகர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டது. இதை மீனாவே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

நுரையீரல்
மேலும் மீனா, நைனிகா, அவரது பாட்டி மல்லிகா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வித்யாசாகர் கொரோனாவிலிருந்து மீண்டாலும் நுரையீரல் தொற்று கடுமையாக ஏற்பட்டது. இதனால் அவரது நுரையீரலின் செயல்பாடுகள் கடுமையாக பாதித்தன.

வித்யாசாகர் மறைவு
இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் மீனாவின் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். கோட்டூர்புரத்தில் ஸ்ரீராம் காலனியில் உள்ள நடிகை மீனாவின் வீட்டில் வித்யாசாகரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில் மீனா, அவரது கணவர் வித்யாசாகர் ராவ் குறித்து அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறிகள் வியாபாரம் செய்பவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் மீனா மிகவும் நல்ல பெண். நிறைய படத்தில் நடித்திருந்தாலும் அவர் பந்தா இல்லாதவர்.

சிரிப்பார்
எங்களிடம் நேரடியாக பேசியிருக்காவிட்டாலும் எங்களை பார்த்ததும் சிரிப்பார். அவர் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும். அது அழகாக இருக்கும். குழந்தையை பள்ளிக் கூட்டிக் கொண்டு செல்லும் போதும் கூட்டி வரும் போதும் எங்களை பார்த்து சிரிப்பார். நாங்கள் வணக்கம் வைத்தால் அவரும் வணக்கம் வைப்பார்.

10 வயசு குழந்தை
வித்யாசாகரை குறைந்த எண்ணிக்கையிலேயே பார்த்திருக்கிறோம். அவரும் மீனாவுடன் போகும் போது எங்களை பார்த்து மீனா சிரித்ததிலிருந்து வாடிக்கையாக அவரும் சிரிப்பார். மீனா நடந்தே கோயிலுக்கு செல்லும் போதும் பார்த்துள்ளோம். இனி மீனாவின் முகத்தில் எப்படி சிரிப்பை பார்ப்பது! 10 வயசு குழந்தை அப்பா இல்லாமல் எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன என அந்த மக்கள் உருக்கமாக கூறினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications