Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி!
சென்னை: நடிகர் விஜய்யை காங்கிரஸ் தலைமையின் அனுமதியுடன்தான் நான் சந்தித்தேன் என பிரவீன் சக்கரவர்த்தி ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் வரை பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. தற்போது தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சாரம் நடந்து வரும் நிலையிலும் மேலும் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

காங்கிரஸில் ராகுலுக்கு நெருக்கமானவராக இருப்பவர் பிரவீன் சக்கரவர்த்தி. இவர் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி குறித்து தெரிவிக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் ஒரு செய்தி சேனலுக்கு இவர் பேட்டி அளிக்கும் போது கூறியிருப்பதாவது: சில மாதங்களுக்கு முன்பு விஜய்யை நானாக தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. கட்சித் தலைமை அனுமதியுடன்தான் சந்தித்தேன்.
கடந்த 6 மாதங்களில் நான் செய்த அனைத்தும், காங்கிரஸ் கட்சித் தலைமையின் அறிவுரை, ஒப்புதல், அனுமதியுடனேயே நடந்தன. தமிழகத்தில் காங்கிரஸுக்கு தன் பலமே தெரியவில்லை. காங்கிரஸ் புத்துயிர் பெற இந்த முறை வேறு ஒரு வாய்ப்பை பயன்படுத்த நினைத்தோம்.
தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக ராகுல்காந்தி, அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் நல்ல மதிப்பை பெற்றுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ள ஏன் கடுமையாக உழைக்கக் கூடாது?
அப்படியிருக்கும் போது ஒரு காங்கிரஸ் கட்சித் தொண்டரோ அல்லது தலைவரோ அமைச்சராகி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஏன் ஆசைப்படமாட்டார்? நியாயமில்லாத எதையும் நாங்கள் கேட்கவில்லை.
காங்கிரஸுக்கு அதிக சீட் கேட்டு கிடைக்காததால் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதிக இடங்கள் கிடைக்காத பட்சத்தில் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
மேலும் வரும் தேர்தல் ஒரு கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும். இதில் தவெக ஆளுங்கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் என்பது உண்மை என பிரவீன் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்கள், வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதில் பிரவீன், முக்கியப் பங்கு வகிக்கிறார். குறிப்பாக, 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் கட்சியின் தரவு மேலாண்மையில் இவர் தீவிரமாகச் செயல்பட்டார்.
இவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "நாங்கள் அனுமார் மாதிரி, எங்களுடைய பலம் எங்களுக்கே சரியாகத் தெரியாது" என குறிப்பிட்டுள்ளார்.
அது போல் பிரவீன் மற்றொரு பேட்டியில் கூறியிருப்பதாவது: "திமுக கூட்டணியில் நாங்கள் கூடுதல் இடங்களைப் பெறப் பல முயற்சிகளைச் செய்தோம், ஆனால் எங்களுக்கு ஒரு சின்ன தோசையைக் கொடுத்துவிட்டு அதையே எல்லாரும் பங்கு போட்டுச் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
இன்னொரு பக்கம் "எங்களுக்குக் கல்யாண விருந்து வைக்க கூப்பிடுகிறார்கள்" என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியிருப்பதுதான் இப்போது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அது போல் விஜய், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உண்மையான காங்கிரஸ் கட்சிக்கு தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் என கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கேட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற பேச்சுவார்த்தை நடந்த போதே மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் போன்றோர் கட்சி தலைமைமை மீறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். தற்போது வெள்ளம் திரண்டு வரும் போது அணை போடும் கதையாக திமுக, காங்கிரஸ் சுமூகமாக பயணிக்கும் நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பழசை கிளறுவது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்கிறார்கள்.
-
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,!












Click it and Unblock the Notifications