Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெய்யழகன் படத்துல வளவளனு பேசிட்டேயிருக்காங்க.. விமர்சகர்கள் மன நோயாளிகளா? வடிவேலு சொன்ன அந்த 10 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில இயக்குனர்கள் தங்களை தாங்களே அதிமேதாவிகளாகவும், புத்திசாலிகளாகவும் நினைத்து செயல்படுவார்கள்.. இதுபோன்றவர்கள்தான் மனநோயாளிகள்.. ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்தால், தாராளமாக அதுகுறித்து கருத்து சொல்லலாம்.. ஆனால், விமர்சிப்பவர்கள் எல்லாம் மனநோயாளிகள் என்று சொன்னால் நியாயமா? மக்களை முட்டாளாக நினைக்கும் யாருமே புத்திசாலிகள் கிடையாது என்று மெய்யழகன் பட இயக்குனர் பிரேம்குமார் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு சென்னையில் 4 நாட்களுக்கு முன்பு நடந்தது.. அதில் பேசிய நடிகர் வடிவேலு யூடியூபர்களை கடுமையாக சாடினார்.

Meiyazhagan Actor Vadivelu

வடிவேலு காட்டம்

"காசு கொடுத்து படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள். 10 பேர் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். யூடியூப் ஒன்றை வைத்துக் கொண்டு சினிமா கலைஞர்களை தப்பு தப்பாக பேசி கொண்டிருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதேபோல, 'மெய்யழகன்' இயக்குநர் பிரேம் குமார் பேட்டி ஒன்றில் கூறும்போது, "மெய்யழகன்' படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம் என்றார்கள். ரிவ்யூ பண்ணும்போது என்னென்னமோ பேசிட்டு எப்படி டாப் 3ல் வந்துச்சுனு தெரியல. இது ஒரு மன நோய்னு தான் நான் சொல்வேன். பைரசியை விட விமர்சகர்கள் டேஞ்சர் ஆனவர்கள்" என்று காட்டமாக கூறியிருந்தார்.

மெய்யழகன் பிரேம்குமார்

சில மாதங்களுக்கு முன்பும்கூட, வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிடும் திரை விமர்சகர்களை கடுமையாக சாடியிருந்தார் பிரேம்குமார். இந்நிலையில், வடிவேலு மற்றும் பிரேம்குமார் பேச்சுக்களுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "மனநோயாளிகள் என்று சொல்லி உள்ளார். இப்படி பேச அவருக்கு என்ன உரிமை உள்ளது? மெய்யழகன் நல்ல படம்தான்.. நல்ல விஷயத்தை படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆனால் மெஜாரிட்டி ஆடியன்சுடன், அந்த படம் கனெக்ட் ஆகவில்லை..

படம் நல்லா இருக்கிறது என்றாலும், ஏன் வளவளன்னு மூன்றரை மணி நேரத்துக்கு படத்தை எடுத்து வச்சிருக்காங்க என்று நானே மெய்யழகன் படத்தை பற்றி விமர்சித்திருந்தேன். அதுமட்டுமல்ல, கார்த்தி, அரவிந்த்சாமி இருவரும் படம் முழுக்க பேசி கொண்டிருந்தால், எவ்வளவு நேரம்தான் அதை பார்ப்பது?

96 படத்தின் வெற்றி இதுதான்

இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு கார்த்தி என்ன உறவு? என்பதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம். ஆனால், அப்படி சொல்ல முயற்சிக்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் ஏதாவது தடங்கல் வந்துவிடுவது போல காட்டுகிறார்கள். அதாவது, திரைக்கதை என்பது அதுவாகவே தானாக நகர்வது போல இருக்க வேண்டும். ஆனால், டைரக்டர் பிரேம்குமார், திரைக்கதையை சாமர்த்தியமாக திரைக்கதையை நகர்த்தி சென்றுள்ளார்..

இதே இயக்குனர் எடுத்த 96' படத்தை மக்கள் கொண்டாட என்ன காரணம்? பொதுவாக டைரக்டர் தரப்படும் படங்கள், மக்களின் உணர்வுடன் கலந்துவிட்டால், அது வெற்றிப்படமாக மாறிவிடும்.. அதுதான் 96 படத்தில் நடந்தது.. ஆனால், மெய்யழகனை ஒருகுறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே ரசித்தார்கள்.. எல்லாருக்கும் பிடிக்குமான படமாக அது இல்லை.

மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும் என்கிறார் பிரேம்.. அப்படியானால் தமிழ் ரசிகர்களின் தரம் சரியில்லை என்கிறாரா? அதுக்கு மலையாளத்திலேயே படத்தை அவர் எடுத்திருக்கலாமே? இதே தமிழ் ரசிகர்கள்தானே 96 படத்தையும் கொண்டாடினார்கள்.. இந்த ரசிகர்களை எப்படி மனநோயாளிகள் என்று சொல்லலாம்?

மனநோயாளிகள் யார்

இப்போது வரை ஏன் பிரேமுக்கு எந்த நடிகர்களும் அடுத்த படத்துக்கு தேதி தரவில்லை?ஹிட் படம் தந்த டைரக்டராக இருந்தால், உடனே அடுத்த படம் வந்திருக்குமே? மாநகரம் படம் ஹிட்டை லோகேஷ் தந்ததுமே, உடனே கைதி, மாஸ்டர், விக்ரம், கூலி, என்று கமல், ரஜினி என்று நீண்டு போகவில்லையா?

சிலர் தங்களை தாங்களே அதிமேதாவிகளாகவும், புத்திசாலிகளாகவும் நினைத்து செயல்படுவார்கள்.. இதுபோன்றவர்கள்தான் மனநோயாளிகள்..

10 யூடியூபர் யார் - போர்க்கால நடவடிக்கை

படத்தை விமர்சித்தால் தாராளமாக அதுகுறித்து கருத்து சொல்லலாம்.. ஆனால், விமர்சிப்பவர்கள் எல்லாம் மனநோயாளிகள் என்றால் என்ன அர்த்தம்? அந்த காலத்தில் டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் படம், விக்ரமின் சேது படம் உட்பட எத்தனையோ படங்கள் விமர்சனங்களாலேயே வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. மக்களை முட்டாளாக நினைக்கும் யாருமே புத்திசாலிகள் கிடையாது.

நடிகர் வடிவேலு விமர்சனம் செய்பவர்கள் மீது போர்க்கால நடவடிக்கை கேட்கிறார்.. அந்த 10 யூடியூபர்கள் யார் என்று பெயர் சொல்ல வேண்டியதுதானே? அப்படியானால் யாருமே இவர்களை விமர்சிக்கக்கூடாதா?

நல்ல படம் தந்தால், நல்ல விமர்சனங்கள்தானே செய்வார்கள்? சமீபத்தில்கூட, குட்நைட், பார்க்கிங், லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி என்று நல்ல படங்கள் வரவில்லையா? நல்ல படத்தை தராமல் இவர்கள் எடுப்பதை மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அது தவறான மனநிலை" என்று கொந்தளித்து பேசியிருக்கிறார் பாலாஜி பிரபு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+