Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டிஸ்சார்ஜ்” ஆனந்த்.. “அட்மிட்” கரு.பழனியப்பன்! நீயா நானா கோபிநாத்துடன் ஒப்பீடு -எல்லை மீறும் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து கோபிநாத்தை நெட்டிசன்கள் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில், தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தி வரும் இயக்குநர் கரு.பழனியப்பனை மீம்ஸ்களால் துளைத்து வருகின்றனர்.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

நீயா நாயா

நீயா நாயா

இதில் குறிப்பாக கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

பணிப்பெண்கள் விவாதம்

பணிப்பெண்கள் விவாதம்

இந்த நிலையில் கடந்த வாரம் வேலைக்கு அமர்த்திய குடும்பத்தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில், வீட்டு உரிமையாளர்கள் தங்களை நடத்தும் விதம் கடைபிடிக்கும் தீண்டாமை குறித்து வெளிப்படையாக பேசினர். இதனை கேட்ட நெறியாளர் கோபிநாத் வீட்டு உரிமையாளர்களை மடக்கி கேட்ட கேள்விகள் பெரும் பாராட்டை பெற்றது. அந்த நிகழ்ச்சியும் அதிக பிரபலமானது.

படித்த அம்மா VS படிக்காத அப்பா

படித்த அம்மா VS படிக்காத அப்பா

அதேபோல் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் படித்த அம்மா VS படிக்காத அப்பா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் தனது மகளின் பிராக்ரஸ் ரிப்போர்டை பார்த்து கையெழுத்திட விரும்பும் ஒரு படிக்காத அப்பாவை அவரது மனைவி நிகழ்ச்சியிலேயே அவமானப்படுத்தும் வகையில் பேச, உடனே பரிசுப்பொருளை நிகழ்ச்சிக்கு இடையிலேயே அவரது மகளை விட்டு வழங்கி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

கோபிநாத் VS கரு.பழனியப்பன்

கோபிநாத் VS கரு.பழனியப்பன்

அடுத்தடுத்து சமூக அக்கறை கொண்ட தலைப்புகளை எடுத்து விவாதித்ததன் காரணமாகவும், அதில் கோபிநாத்தின் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பலர் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர். இதில் ஒருசிலர் தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தி வரும் கரு.பழனியப்பனை கோபிநாத்துடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழா தமிழா

தமிழா தமிழா

நீயா நானாவை போன்றே ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழா தமிழாவில் ரக்கட் பாய்ஸ் vs சாக்லேட் பாய்ஸ் என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 ரக்கட் பாய்ஸ் விவாதம்

ரக்கட் பாய்ஸ் விவாதம்

இதில் ராக்கட் பாய்ஸ் பிடிக்கும் என்று பேசிய பெண்களில் பலர் ஆண்களை உருவ கேலி செய்ததாகவும், தாடி வளராததை வைத்து விமர்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக இயக்குநர் கரு.பழனியப்பன், பெண்களை ஒருமையில் பேசிய ஆண்களை கடுமையாக கண்டித்ததாகவும், அதே நேரம் ஆண்களை ஒருமையில் பேசிய பெண்களை கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.

எல்லை மீறும் மீம்ஸ்கள்

எல்லை மீறும் மீம்ஸ்கள்

இதனை விமர்சிப்பதற்கு உரிமை இருந்தாலும் மீம்ஸ் என்ற பெயரில் எல்லை கரு.பழனியப்பன் விமர்சிக்கப்படுவதாகவே தெரிகிறது. குறிப்பாக நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்டதை பற்றி விமர்சிக்காமல் அவர் மீது தனிநபர் தாக்குதல்களை தொடுப்பது, உருவ கேலி செய்வது போன்ற விமர்சனங்களை அதிகம் காண முடிகிறது.

முற்போக்கு தலைப்புகள்

முற்போக்கு தலைப்புகள்

இயக்குநர் கரு.பழனியப்பனும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்குமுறை, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பல முற்போக்கு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பான கருத்துக்களை தெரிவித்தவர்தான் என்று நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

மீம் டிரெண்ட்

மீம் டிரெண்ட்


கடந்த சில ஆண்டுகளாகவே யாராவது ஒருவரை வைத்து தொடர் மீம்ஸ்களை வெளியிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் சங்கர் மகள் அதிதி, அதை தொடர்ந்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் ஆகியோரை விமர்சித்து மீம்களை வெளியிட்டவர்கள் தற்போது கரு.பழனியப்பனை சாடி வருகிறார்கள். புதிய பிரபலம் கிடைத்தவுடன் இவரை அட்மிட் செய்து, அவரை டிஸ்சார்ஜ் செய் என்று வாக்கியமும் மீம் கிரியேட்டர்களால் அதிகம் புழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+