ரயில்வே தேர்வில் குளறுபடி? நாமக்கல் மாணவருக்கு உடுப்பியில் ஹால்டிக்கெட்! நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சென்னை : மே ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள ரயில்வே தேர்வுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், நாமக்கல்லில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியில் தேர்வு மையத்தில் தேர்வு எழுத அழைப்பு வந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் 24 ஆயிரத்து 1649 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் இரண்டரைக் கோடி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுகள் மே மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது விண்ணப்பதாரர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் பல விண்ணப்பதாரர்களுக்கு ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது நாமக்கல்லில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியிலும், ஈரோட்டில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூரில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மாணவர்கள் தமிழக அரசு மற்றும் பிற அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதல்நிலைத் தேர்வில் இதேபோல பிரச்சினை எழுந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications