சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மெட்ரோ ரயில் : பரங்கிமலை - சென்ட்ரல் வரை 2 வது வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பரங்கிமலை - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரயில் நிலையம் இடையேயான 2வது வழித்தடத்தில் இன்று முதல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டாம் கட்டமாக இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பரங்கிமலை - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரயில் நிலையம் இடையேயான இரண்டாவது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

இன்று காலை 7 முதல் இரவு 8 மணி வரை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Metro rail 2nd phase services in Chennai From Today

கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக முடங்கி கிடந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை 7ஆம் தேதி முதல் தொடங்கியது. விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையேயான முதல் வழித்தடத்தில் மட்டும் போக்குவரத்து தொடங்கியது.

பயணிகள் பாதுகாப்பான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்ட்டர்களில் ஸ்மார்ட் கார்டு, கியூ.ஆர் கோடு குறியீடு முறையில் டிக்கெட் பெற்றுக்கொள்ளவும் பயணிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். படிப்படியாக டோக்கன் டிக்கெட் முறைக்கு விடை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள பயண அட்டையை பரிசோதிக்கும் ரீடர் இயந்திரங்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் நாளில் மட்டும் 5 ஆயிரத்து 33 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் 4 ஆயிரத்து 869 பயணிகள் ஸ்மார்ட் கார்டு உதவியுடனும், 164 பேர் மெட்ரோ ரயில் செயலி மூலம் தங்களுடைய செல்போன் எண்ணுக்கு வந்த கியூ.ஆர் கோடு குறியீடு டிக்கெட் மூலமும் பயணம் செய்துள்ளனர்.

ஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா? இ பாஸ் அவசியம் - பாதுகாப்பு முக்கியம்ஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா? இ பாஸ் அவசியம் - பாதுகாப்பு முக்கியம்

முதல் நாளில் குறைவான பயணிகள் மட்டுமே வந்ததால், பெரும்பாலான ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 2வது நாளாக நேற்று மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

Metro rail 2nd phase services in Chennai From Today

இந்த நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பரங்கிமலை புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரயில் நிலையம் இடையேயான 2 வது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

காலை 7 முதல் இரவு 8 மணி வரை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது. மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தும் நேரமும் 20 வினாடிகளில் இருந்து 50 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

English summary
2nd phase metro operations resume today in Chennai. Metro services were suspended in late March when the government announced a nationwide lockdown to check the spread of the novel coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X