ஜெய்சங்கர் வீட்ல ஜெயலலிதா..! துப்பாக்கியுடன் சென்ற எம்ஜிஆர்..! குட்டி பத்மினிக்கு நேரம் சரியில்லையா?

ஜெய்சங்கரை துப்பாக்கியால் சுட போனார் எம்ஜிஆர் என்று குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஒருநாள் புரட்சி தலைவர், ஜெயலலிதா அக்கா வீட்ல ஜெய்சங்கர் அங்கிள் இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, துப்பாக்கியை எடுத்துக்கிட்டு சுட வந்துடுறாரு" என்று குட்டிபத்மினி பேசிய பேச்சு, மிகப்பெரிய விவாதத்தையும், சில சர்ச்சைகளையும், சில அதிருப்திகளையும் தாங்கி வந்துள்ளது.

நேற்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.. பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார்.

அதில், ஜெயலலிதா, ஜெய்சங்கர், எம்ஜிஆர் ஆகியோர் பற்றி தெரிவித்து, ஒரு முக்கிய சம்பவத்தையும் அதில் பகிர்ந்திருந்தார். அதன் சுருக்கம் இதுதான்:

 ஜெயலலிதா

ஜெயலலிதா

"ராமண்ணா அப்படிங்கிற ஒரு டைரக்டரின் படத்துல, அந்த படத்தின் பெயர் நீ... அதுல ஜெயலலிதா அக்காவும், ஜெய்சங்கர் அங்கிளும் ஒன்னா ஆக்ட் பண்றாங்க... ஜெயலலிதா அக்காவுக்கு யாராவது இங்கிலீஷ் நல்லா பேசுனா ரொம்ப பிடிக்கும். ஜெய்சங்கர் நல்லா பேச, அவங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகுது.

புத்தகம்

புத்தகம்

அதன் பிறகு "யார் நீ" என்கிற படத்திலும் தொடர்ந்து நடிக்கிறாங்க. அப்போது அவங்களுக்கு இடையே ஒரு கெமிஸ்ட்ரி. அதாவது ஸ்டுடியோவில் இருக்கும்போது ஒரு சேர்ல கால் மேல் கால் போட்டு புஸ்தகம் வச்சுக்கிட்டு யாரிடமும் பேசாத அம்மு அக்கா, ஜெய்சங்கர் அங்கிளிடம் மட்டும் அடிக்கடி கலகலனு பேச ஆரம்பிக்கிறாங்க. சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க, அவரும் ஏதாவது பதிலுக்கு பேசுறாங்க.

துப்பாக்கி

துப்பாக்கி

2 பேரும் பழகுவதில் ஒரு சந்தோஷம் தெரியுது... இது எப்படியோ கிசுகிசுவாக போய், புரட்சித் தலைவர் அவர்களின் காது வரைக்கும் போய்டுச்சு.. ஒரு நாள் அவர் ஜெய்சங்கர் அங்கிள் ஜெயலலிதா அக்கா வீட்ல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, துப்பாக்கியை எடுத்துக்கிட்டு சுட வந்துடுறாரு... ஆனா அந்த வீட்ல ஜெய்சங்கர் அங்கிள் அந்த நேரம் நல்ல வேளை இல்லை... இருந்திருந்தால் அன்று ஜெய்சங்கர் அங்கிளை அவர் சுட்டுருந்தாலும் சுட்டுருப்பார்" என்று கூறியிருந்தார்.

வீடியோ

வீடியோ

இந்த பேச்சுதான் 2 நாளாக இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இதில் ஜெய்சங்கர் ரசிகர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் என இரு தரப்பினராக பிரிந்து, திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. ஜெய்சங்கரை பொறுத்தவரை, சினிமா தவிர்த்து அவர் உண்மையில் மிக நல்ல மனிதர்.. எந்த நேரமும் யாருக்காவது உதவி செய்து கொண்டே இருப்பார்.. அவரால் திரையுலகில் பிழைத்தவர்கள் ஏராளம்..

மாணவர்கள்

மாணவர்கள்

மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு பீஸ் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டால், நேரடியாக ஜெய்சங்கர் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே சென்று விடுவார்களாம். மாணவர்களை பார்த்ததும், யார், எங்கு படிக்கிறார்கள் என்றுகூட விசாரிக்காமல் படிப்புக்காக பணத்தை அவர்களின் பாக்கெட்டில் அள்ளி அள்ளி திணிப்பாராம். அந்த வகையில் ஜெய்சங்கரால் படித்து, பட்டம் பெற்றவர்கள் இன்று உயர்ந்த இடத்தில் உள்ளதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அதாவது எம்ஜிஆர், மற்றவருக்கு தெரிந்தே பல உதவிகளை செய்தார் என்றால், ஜெய்சங்கர் யாருக்குமே தெரியால் பலரை வாழ வைத்துள்ளார் என்பதே உண்மை.

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

இந்நிலையில், குட்டிபத்மினி இப்படி ஒரு வீடியோவை போடவும், ஜெய்சங்கரின் ரசிகர்கள், நலன்விரும்பிகள் திரண்டு வந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.. ஜெய்சங்கர் பற்றி பலர் பலமுறை சொல்லியிருந்தாலும் நல்லவர்களைப்பற்றி அடிக்கடி எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தால்தான் அந்த நல்லவர்களுக்கு பெருமை பலரும் செய்ய முன்வர அவர்களின் வரலாறுகள்தான் ஊக்கம்தரும் என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள். மேலும் சிலர், "ஜெய்சங்கர் பி.எல். படித்தவர். அந்த காலகட்டத்தில் வக்கீல் படிப்பு சிறப்பானதுதான். அவர் அதிகம் படிக்கவில்லை என்று கூறி விட்டீர்களே?" என்று ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

கேள்விகள்

கேள்விகள்

அதேபோல, எம்ஜிஆர் ரசிகர்களும், அதிமுக தொண்டர்கள் சிலரும் குட்டிபத்மினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. "கதையின் கடைசியில் எம் ஜி ஆரின் துப்பாக்கிக்கு வேலை கிடைத்ததா அல்லது அது புஸ்வானம் என்று புறந்தள்ளபட்டதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

கண்டனம்

கண்டனம்

"எம்ஜிஆர் செய்த ஒரே நல்லது திரும்ப எதிர்பாராமல் செய்த நல்லது அன்னதானம் தான். மிக பெரிய தர்மம் அது. மற்றபடி குணம் ஒன்னும் சொல்வது போல் இல்லை என்றும், உங்கள் சேனல் உயர்த்த, உயர்ந்த மனிதன் எம்ஜிஆர் அசிங்கமாக பேசாதீங்க.. எம்ஜிஆரிடம் இருந்த நல்ல குணத்தை சொல்ல உங்களுக்கு மனசு வரல.. என்னமா இப்படி பண்றீங்க?.. எம்ஜிஆர் இல்லை என்ற தைரியத்தில் பேசுவது கண்டிக்கத்தக்கது" என்று குட்டி பத்மினியிடம் தெரிவித்து வருகின்றனர்.

 வைரல்

வைரல்

மேலும் சிலர், "இந்த பெண் உண்மை போல நன்றாக பொய் பேசுவார். எம்ஜிஆர் ஏன் சுடப்போகிறார்? ஒருவர் இறந்த பின் தவறாக பேசத் கூடாது.. அதுவும் ஒரு நல்ல மனிதனை பற்றி பேசக்கூடாது என்றும், "புரட்சி தலைவர், பக்தர்கள் சார்பாக உங்களை கடுமையாக கண்டிக்கின்றோம் .வழக்கு தொடர்வது தொடர்பாக. . அண்ணன்.சைதை துரைசாமி அவர்கள்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.. ஆக மொத்தம் இருவேறு கருத்துகளுடன் குட்டிபத்மினியின், யூடியூப் சேனல் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+