ஆயிரம் நிலவே வா பாடுவதற்கு... எம்ஜிஆர் காத்திருந்த அந்த 2 மாதங்கள்... நெகிழ்ந்த எஸ்பிபி!!
சென்னை: அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் குரலுக்கு எஸ்பிபி பாடி இருப்பார். அந்தப் பாடலை பாடுவதற்கு முன்பு எஸ்பிபிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குறித்த நாளில் பாட முடியவில்லை. ஆனாலும், இவருக்காக எம்ஜிஆர் காத்திருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு தனக்கு பறி போய்விட்டது என்று கருதி எஸ்பிபி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடலை எம்ஜிஆருக்காக எஸ்பிபி பாடி இருந்தார். இந்தப் பாடலை பாடுவதற்கு முன்பு எஸ்பிபிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே ரெக்கார்டிங்கை எம்ஜிஆர் ரத்து செய்துள்ளார்.

வாய்ப்பு
எஸ்பிபிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த பின்னர்தான் எஸ்பிபி பாட வேண்டிய பாடல் ரெகார்டிங்கை எம்ஜிஆர் நிறுத்தியுள்ளார். இதை அறிந்த பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பு, பறி போய்விட்டது என்று எஸ்பிபி வருத்தப்பட்டுள்ளார்.

நெகிழ்ச்சி
ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தன்னை அழத்துச் செல்வதற்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கார் வந்தபோது எஸ்பிபி நெகிழ்ந்துவிட்டாராம். பிரபலமே ஆகாத எனக்கு இவ்வளவு மரியாதையா என்று எஸ்பிபி ஆச்சரியப்பட்டுள்ளார். பாடலையும் பாடி முடித்தார்.

கலக்கம்
தன்னை தட்டிக் கொடுத்த எம்ஜிஆர், ''அடிமைப் பெண் படத்தில் எனக்காக பாடப் போகிறீர்கள் என்று உங்களது நண்பர்களிடம் கூறி இருப்பீர்கள். அவர்களும், உன் பாடல் அடிமைப்பெண் படத்தில் வரும் என்று காத்துக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் பாடுவதற்கு பதிலாக வேறு ஒருவரை பாட வைத்தால், அது உங்களுக்கும், உங்களது நபர்களுக்கும் ஏமாற்றமாக இருக்காதா. அதனால்தான் ரெக்கார்டிஙகை நிறுத்தச் சொன்னேன்'' என்று கூறிள்ளார். இதைக் கேட்டு எஸ்பிபிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கலங்கிய கண்களுடன் நின்றுள்ளார்.

ஜெயலலிதா
இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. எம்ஜிஆருடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்தப் படத்தில் நடித்து இருப்பார். ஆயிரம் நிலவே வா பாடலை இவருடன் பாடகி பி. சுசீலா பாடி இருப்பார்.

ராமாபுரம்
இந்தப் பாடல் பயிற்சிக்கு எம்ஜிஆரின் ராமாபுரம் இல்லத்திற்கு எஸ்பிபியை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது இல்லத்திற்கு சென்றபோது, இவருக்காக பலரும் காத்துக் கொண்டு இருந்துள்ளனர். எஸ்பிபி பாடிய பாடலில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் என்று நடிகர் சிவாஜியும் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications