AI ஆதிக்கம் இன்னும் முடியல.. Layoffs தொடராலம்! சிம்பாலிக்காக சொல்லும் மைக்ரோசாப்ட்
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), ஐடி துறையில் ஏராளமான வேலைகளை பறித்திருக்கிறது. இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள், AI மூலமான பணி நீக்கங்கள் மேலும் தொடரலாம் என்கிற அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு 15,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது தங்களது ஊழியர்களுக்கான நாளிதழ் மற்றும் நூலக சந்தாக்களை ரத்து செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கற்றலுக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளிப்பதே இதன் காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த பல மாதங்களாகவே மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கணிசமாக முதலீடு செய்கிறது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு 15,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது ஊழியர்களுக்கான நாளிதழ் மற்றும் நூலக அணுகலைக் குறைத்துள்ளது.
'தி வெர்ஜ்' அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்ட் கடந்த ஆண்டு நவம்பரில் செய்திச் சந்தாக்களை ரத்து செய்யத் தொடங்கியது. பல வெளியீட்டாளர்களுக்கு தானியங்கி ரத்து அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. "தற்போதைய எந்த ஒப்பந்தத்தையும் அதன் காலாவதி தேதிக்குப் பிறகு புதுப்பிக்கப் போவதில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பே இது, என மைக்ரோசாப்ட் மின்னஞ்சலில் குறிப்பிட்டது.
இம்மாற்றங்களில் 'ஸ்ட்ராடஜிக் நியூஸ் சர்வீஸ் (SNS)' உடனான மைக்ரோசாஃப்ட்டின் உறவு முடிவுக்கு வருவது முக்கியம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, 2,20,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு SNS உலகளாவிய அறிக்கைகளை வழங்கியது. மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு SNS அனுப்பிய தகவலில், "Microsoft அனைத்து நூலக ஒப்பந்தங்களையும் நிறுத்தப் போவதாக ஒரு தானியங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதில் உங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் முக்கியமான SNS Global Report அடங்கும்," எனத் தெரிவித்தது.
அதேபோல ஊழியர்கள் "தி இன்ஃபர்மேஷன்" போன்ற வணிக வெளியீடுகளுக்கான டிஜிட்டல் அணுகலை இழந்துள்ளதாகவும், மைக்ரோசாப்ட் நூலகத்தில் இருந்து வணிகப் புத்தகங்களைப் பெற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மைக்ரோசாஃப்ட்டின் இந்த மாற்றங்கள் செலவுக் குறைப்புடன், செயற்கை நுண்ணறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பெரிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா, AI சார்ந்த அணுகுமுறைக்கான மாற்றத்திற்குத் தலைமை தாங்குகிறார். இம்மாற்றத்திற்கு ஒத்துழைக்காத மூத்த நிர்வாகிகளுக்கு, நிறுவனத்தை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications