Microsoft: இந்தியாவுக்கு ஜாக்பாட்! கூகுளை தொடர்ந்து களமிறங்கியது மைக்ரோசாப்ட்.. ரூ.1.57 லட்சம் முதலீடு செய்கிறது
சென்னை: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இது தான் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஆந்திராவில் பிரமாண்டமாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது மைக்ரோசாப்டும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்கான முதலீடு ஆகியவற்றில் ரூ.1.57 லட்சம் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

அதிக வேலைவாய்ப்புகள்
ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இதுவேயாகும். ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஆந்திராவில் பிரமாண்டமாக முதலீடு செய்ய உள்ள நிலையில், அடுத்ததாக மைக்ரோசாப்ட்டும் களமிறங்கியுள்ளது.. உலகின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியாவில் முதலீட்டை அறிவித்துள்ளது.
இந்த முதலீடுகளால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்யநாதெல்லா அறிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மைக்ரோசாப்ட். தகவல் தொழில் நுட்ப துறையில் உலக அளவில் பெரும் ஜாம்பவான் நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா உள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர்.
பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில், மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ, சத்ய நாதெல்லா வெளியிட்டார். இது தொடர்பாக சத்ய நாதெல்லா கூறுகையில், ஆசியாவிலெயே பெரிய முதலீடாக ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டை இந்தியாவில் செய்ய மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி ட்வீட்
செயற்கை நுண்ணறிவு துறை மேம்பாடு மற்றும் திறன் ஆகிய துறையை நோக்கி இந்த முதலீடு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றியையும் தனது எக்ஸ் பதிவில் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். சத்ய நாதெல்லாவின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
"சத்ய நாதெல்லாவுடன் ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை நடைபெற்றது. ஆசியாவில் மிகப்பெரிய முதலீட்டை மைக்ரோசாப்ட் இந்தியாவில் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் புதுமை மற்றும் திறன் கொண்ட இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
கூகுள் தரவு மையம்
ஏற்கனவே இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் தனது மிகப்பெரிய தரவு மையத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்து 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுளின் தரவு மையம் அமைய உள்ளது.
அமேசான் நிறுவனமும், இந்தியாவில் தரவு மையம் அமைக்க பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சிப் உற்பத்தி செய்யும் Qualcomm நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியோனோ ஆர். அமோனை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் ஏஐ தொழில் நுட்பத்தின் மேம்பாடு மற்றும் புதுமை திறன் ஆகியவை தொடர்பாக இருவரும் ஆலோசித்து இருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications