ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆகிவிட்டார்! டெல்லிக்கு போனதே 2 முறை தான்! துரைமுருகன் 'பளிச்'!
முதல்வர் ஸ்டாலினை ஆல் இந்தியா லீடர் எனக் கூறி துரைமுருகன் புகழாரம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தேசியத் தலைவராகிவிட்டார் என்றும் கருணாநிதிக்கு கூட இந்த வாய்ப்பு உடனே கிட்டவில்லை எனவும் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதே 2 முறை தான் என்றும் முதலமைச்சராகி 2 ஆண்டுகளுக்குள் அவர் தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார் எனவும் புகழாரம் சூட்டினார்.
கருணாநிதி முதலமைச்சராகிய பிறகு தேசியத் தலைவராக வருவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆனதாக துரைமுருகன் கூறியுள்ளார்.

மொழிப்போர்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் தாம்பரம் பகுதியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், மொழிப்போர் பற்றி சில நிமிடங்கள் பேசிவிட்டு நடப்பு அரசியல் விவகாரம் பற்றி ஒரு பிடி பிடித்தார். குறிப்பாக ஆளுநர் ரவியை விமர்சிக்கும் வகையில் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன.

53 ஆண்டுகால அனுபவம்
சட்டசபையில் ஆளுநர் ரவி மிஸ்யூஸ் செய்துவிட்டார் என்றும் அச்சிடப்பட்ட உரையில் இருக்கும் வரிகளை விட்டிருந்தால், சரி ஏதோ தவறுதலாக விட்டிருக்கிறார் என நினைத்திருப்போம், ஆனால் அவரோ இல்லாத வரிகளை எல்லாம் சேர்த்து படித்ததால் தான் ஒரு சிட்டிகை போட்டோம் எனவும் துரைமுருகன் பேசியிருக்கிறார். 53 ஆண்டுகாலம் சட்டசபை அனுபவம் தனக்கு இருப்பதாகவும் சட்டசபையின் ஒவ்வொரு கல்லும் தனக்கு பரிச்சயம் எனவும் துரைமுருகன் பேசியிருக்கிறார்.

ஆல் இந்தியா லீடர்
கருணாநிதி முதலமைச்சராகிய பிறகு 10 முதல் 15 ஆண்டுகள் கழித்து தான் ஆல் இந்தியா லீடர் ஆக முடிந்ததாகவும் ஆனால் முதல்வராகி இரண்டே ஆண்டுகளுக்குள் ஸ்டாலின் ஆல் இந்தியா லீடர் ஆகியிருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். இத்தனைக்கும் ஸ்டாலின் டெல்லிக்கே 2 முறை தான் சென்றிருப்பதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டார். தமிழக சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்த விவகாரம் தேசியளவில் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமர்ந்து பேசினார்
வழக்கமாக திமுக மேடைகளில் நின்று கொண்டு பேசும் அமைச்சர் துரைமுருகன் அண்மைக்காலமாக நாற்காலியில் அமர்ந்த படியே பேசி வருகிறார். நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாற்காலியில் அமர்ந்தவாறே பேசினார். 80 வயதை கடந்துவிட்டதால் துரைமுருகனுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications