வீராதி வீரர் அண்ணாமலை கைராசிக்காரர்! பாஜகவுக்கு 10 ஓட்டு வாங்கி தந்தவர்! அமைச்சர் மா.சு. கிண்டல்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு கைராசிக்காரர் என்றும் கர்நாடகாவில் 80,000 தமிழர்கள் வசிக்கும் ஒரு தொகுதியில் வெறும் 10 ஓட்டுக்களை பாஜகவுக்கு வாங்கிக் கொடுத்தவர் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கிண்டல் செய்துள்ளார்.
அண்ணாமலையை வீராதி வீரர் சூராதி சூரர் என நம்பி பாஜக களமிறக்கியதற்கு பலனாக, அந்தக் கட்சி கர்நாடகாவில் இதுவரை சந்திக்காத தோல்வியை பெற்றுக் கொடுத்திருப்பதாக விமர்சித்தார்.

கர்நாடகாவில் அடைந்த தோல்வியை மறைக்கவும், ஊடகங்களில் விவாதப் பொருளை மாற்றவும் தான் ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற பெயரில் சென்னை போரூரில் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் அண்ணாமலையை பங்கம் செய்தார்.
அவரை கடுமையாக விமர்சிப்பதை தவிர்த்து கலாய்க்கும் வகையில் பேசி அங்கிருந்தவர்கள் மத்தியில் அண்ணாமலையை ஜோக்கராக சித்தரித்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் 80,000 தமிழர்கள் வசித்து வரும் நிலையில் அதில் வெறும் 10 ஓட்டுக்களை மட்டுமே அண்ணாமலையால் பாஜகவுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்ததாக கூறினார்.
கர்நாடகவில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்ததற்கு அண்ணாமலையே காரணம் என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications