கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.. மக்களே உஷார்...! எச்சரிக்கும் மா.சுப்பிரமணியன்
சென்னை: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு சுனாமி போல பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவிலும் பரவியது. சுமார் இரு ஆண்டுகள் கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு ஏராளமான மக்கள் பலியான நிலையில், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது.
சுமார் 8 மாதங்களுக்கு மேலாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயினர். இந்நிலையில் மூன்றாவது அலை பிப்ரவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகவும் , கொரோனாவின் பாதிப்பு சுனாமி போல அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது என கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 17 வது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் சுமார் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மிக தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது எனவும், காவல்துறை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

கொரோனா 3வது அலை
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மூன்றாவது அலை துவங்கியுள்ளது என்றும், டெல்டாவும் ஓமைக்ரானும் சேர்ந்து தற்போது மூன்றாவது அலையாக சுனாமி அலை போல பரவி வருகிறது எனவும், எனவே தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு என்பது தேவை வெளியில் செல்லும் மக்கள் முககவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
சென்னையில் நாளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நாளை தடுப்பூசி போடப்படவுள்ளது எனவும், இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார் எனக் கூறிய அமைச்சர், இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 15 வயதை கடந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும், 60 வயது கடந்தவர்கள் மற்றும் முன் களபணியாளர்களுக்கு வரும் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2 தடுப்பூசி செலுத்தி 9 மாத காலம் நிறைவடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என கூறினார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications