தடுப்பூசி போடாதவர்களுக்கே கொரோனா 3வது அலையில் மரணம்.. தடுப்பூசி போட்டுக்கங்க - மா.சுப்பிரமணியன்
சென்னை: தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பின் விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் பொதுமக்கள் அனைவரும் தைரியமாக தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா பரவலின் 3வது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பரவலை குறைக்கும் நடவடிக்கைக்கு தடுப்பூசி முக்கிய காரணியாக இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்னர்.
இதையடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு முகாம்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மெகா தடுப்பூசி முகாம்
இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். கடந்த 8ஆம் தேதி பதினெட்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் 19வது தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தடுப்பூசிக்கு முன்னுரிமை
இதில் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் முன்களப் பணியாளர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறப்பு முகாம் குறித்து ஆய்வு நடத்திய தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனவும், பொதுமக்கள் அனைவரும் தைரியமாக தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 74.11 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். 21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

பக்க விளைவுகள் இல்லை
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் 3வது அலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாக கூறிய அமைச்சர், 1,71,616 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 65 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர் எனக் கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது இன்று பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளலாம் எனவும், தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்பதால், பொதுமக்கள் அனைவரும் தைரியமாக தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications