தேடி வந்த அழைப்பு.. புற்றுநோய் சிகிச்சைக்கான ஆய்வு.. 5 நாட்கள் ஜப்பான் பயணிக்கும் மா.சுப்பிரமணியன்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாட்கள் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை: புற்றுநோய் சிகிச்சைக்காக கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழு 5 நாட்கள் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தின் போது ஜப்பான் நாட்டின் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் நாட்டிற்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில், புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய முன்னோடி நாடாக ஜப்பான் நாடு உள்ளது.
இதனால் ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை குறித்து நேரடியாக சென்று சுகாதாரத் துறையினருடன் ஆய்வு செய்ய உள்ளோம். ஜப்பான் கூட்டுறவு முகமை, புற்றுநோய் சிகிச்சை குறித்து அறிய எங்களை அழைத்துள்ளது.

ஜப்பான் செல்லும் மா.சுப்பிரமணியன்
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றிக்கு நிதி உதவி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15வது நிதி ஆணையத்தின் கீழ் ரூ.800 கோடி அளவிற்கு திட்ட மதிப்புகள் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று நிதி அமைச்சரை சந்தித்தபோது, அவர் ரூ.86 கோடி வழங்கினார்.

மதுரை எய்ம்ஸ்
மதுரை, கீழ்பாக்கம், கோவை உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்களை கட்டுவதற்கும், ஜப்பான் கூட்டுறவு முகமையின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு கடன் பெறப்பட்டுள்ளது. 1,387 கோடி டைக்கா அமைப்பிடம் கடன் வாங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில், மதுரை எய்ம்ஸ் மட்டும் ஜப்பான் கூட்டுறவு நிதியில் தொடங்கப்பட்டது.

தவறாக பேசுகிறார்கள்
தமிழ்நாடு இன்று கல்வி, மருத்துவம், தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் முதன்மையாக விளங்க முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்கு முக்கியமானது. அதனால் அவரின் நினைவாக பேனா சின்னத்தை கடலில் வைப்பதில் தவறில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறேன். மீனவ மக்கள் யாரும் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடலில் மண் மற்றும் கற்களை நிரப்பி பேனா சின்னம் அமைக்கப்படவுள்ளது. ஆனால் கடலையே ஆக்கிரமிப்பது போல தவறான செய்தியை பேசுகிறார்கள்.

அரசியல் காரணங்கள்
ஒரு நினைவு சின்னத்தை அமைப்பதன் மூலம், எதிர்ப்பவர்களின் வன்மத்தை காட்டுகிறது. மீனவர்களுக்காக கடலில் தூண்டில் வளைவு மற்றும் சிறு துறைமுகங்கள் அமைக்கும் போது கடலில் ஆக்கிரமித்து தான் கட்டுகிறோம். அப்போதெல்லாம் கடல் பாதிக்கப்பட்டுள்ளது என்று எந்த மீனவரும் குறை சொல்லவில்லை. ஆனால் இந்த சின்னம் அமைப்பதற்காக, அரசியல் காரணங்களுக்காகவே அதை எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications