பணம் வாங்காம நேர்மையா செலக்ட் பண்ணுங்க சார்.. ட்வீட் செய்தவருக்கு மா.சுப்பிரமணியன் உடனடி ரிப்ளை!
சென்னை: சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பணியிடங்களுக்கான 1066 காலி இடங்களை நிரப்ப பணம் பெற்றுக்கொண்டு போஸ்டிங் போடுவதாக ஒருவர் ட்விட்டரில் ஆதங்கம் தெரிவித்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனே நேரடியாக அவரது ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ பணிகளில் அடங்கிய சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பணியிடங்களுக்கான 1066 காலி இடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ( MRB) வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் 12ஆம் வகுப்பில் உயிரியல் பிரிவில் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவில் பயின்றவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்தவர்களாக இருக்க வேண்டும். மல்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் / ஹெல்த் இன்ஸ்பெக்டர் / சானிட்டரி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏதோ ஒரு பாடத்தை பயின்று, டைரக்டர் ஆப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரிவென்டிவ் மெடிசின் ஆணையத்தில் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். SC, ST, SCA, MBC / DNC உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் உட்சபட்ச வயது வரம்பு இல்லை. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அப்ளை செய்யலாம். அதே போல் OC வகுப்பை சேர்ந்தவர்களில் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OC பிரிவில் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

இந்த சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பதவிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும்.
இந்த அறிவிப்பு சான்றிதழ் படிப்புகளை முடித்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியிடங்களை நிரப்ப பணம் பெற்றுக்கொண்டு ஆட்சேர்க்கை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதுதொடர்பாக ட்விட்டரில் ஒருவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு, "சார் நான் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கோர்ஸ் முடித்துவிட்டு 4 ஆண்டுகளாக வேலை இன்றி இருக்கிறேன். இப்போது சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பணம் கட்டினால் தான் வேலை கிடைக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நான் என்ன செய்வது? எங்களிடம் காசு இல்லை. நேர்மையான முறையில் தேர்வு செய்யுங்கள். ப்ளீஸ்" என பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அவரது ரிப்ளையில், "வணக்கம்! நான் மா.சுப்பிரமணியன். MRB-யின் மூலம் நேற்று முன் தினம் தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முறையாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ளோர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் எங்கும் யாராலும் மாற்று வழிகள் மூலம் தவறிழைக்கவே முடியாது. நீங்கள் ஐயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தேர்வெழுதி வெற்றி பெற முயற்சியுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications