மருத்துவ நிபுணர் எடப்பாடி புதிய சிகிச்சை முறையை கண்டுபிடிச்சு சொல்வாரு.. அமைச்சர் மா.சு கிண்டல்!
சென்னை: மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னால் பின்பற்றலாம் என்று கிண்டல் செய்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக திமுக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களைக் காப்பாற்றத் தேவையான மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி Omeprazole என முன்பு குறிப்பிட்ட நிலையில், இன்று Fomepizole மருந்து பெயரைக் கூறிய நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் அந்த மருந்துகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "Omeprazole - Fomepizole குழப்பத்தில் எடப்பாடி! 20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன். பிறகு இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி, Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol) மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, எடப்பாடி பழனிசாமி முன்பு மருந்து பெயரை குறிப்பிட்டு பேசியதையும், இன்று வேறொரு மருந்து பெயரை குறிப்பிட்டு பேசிய வீடியோவையும் இணைத்து பதிவிட்டுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications